CLOSE
CLOSE AD

மலேசியாவின் புதிய வாழ்வியல் மற்றும் பொழுதுபோக்கு செயலி, ‘SYOK’ அறிமுகப்படுத்தியது ஆஸ்ட்ரோ வானொலி

  • 03 Jul 2019
  • Tags:
மல-ச-ய-வ-ன்-ப-த-ய-வ-ழ்வ-யல்-மற்ற-ம்-ப-ழ-த-ப-க்க-ச-யல-SYOK-அற-ம-கப்பட-த்த-யத-ஆஸ்ட்ர-வ-ன-ல

மலேசியாவின் புதிய வாழ்வியல் மற்றும் பொழுதுபோக்கு செயலியான SYOK-யை தற்போது அனைத்து மலேசியர்களும் அணுக்கலாம். ரசிகர்களுகள் ஆஸ்ட்ரோ வானொலி நிலையங்களின் ஒலிபரப்பு மற்றும் டிவி, SYOK- இன் அசல் காணொளிகள், போட்காஸ்ட், கட்டுரைகள், போட்டிகள், செய்தி மற்றும் போக்குவரத்து நிலவரங்களை அணுக்கலாம். SYOK app மற்றும் இணையதளம் வாயிலாக SYOK சேவையைப் பெறலாம்.  

SYOK வாயிலாக மலேசியர்கள் 25 ஆஸ்ட்ரோ வானொலி நிலையங்களைச் எளிதாக அணுகி, அனைத்து வானொலிகளின் உள்ளடக்கங்கள் (வானொலி ஆன் டிமாண்ட்) போட்காஸ்ட்களையும், குறிப்பாக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட போட்காஸ்ட்களை கேட்டு மகிழலாம்.  அதுமட்டுமின்றி, SYOK செயலி மலேசியர்களுக்கு SYOK அசல்கள், இன்றைய காலக்கட்டத்திற்குப் பொருத்திய சுவாரஸ்யமான மலேசிய கதைகளை உள்ளடக்கிய குறுகிய வடிவலான காணொளிகளைக் கண்டு மகிழலாம். அதை வேளையில், இச்செயலி மூலம் மலேசியர்கள் அண்மைய கட்டுரைகள், செய்திகள் மற்றும்  போக்குவரத்து நிலவரங்கள் போட்டிகளில் கலந்து கொண்டு, பல அரிய பரிசுகளைத் தட்டிச் செல்லும் வாய்ப்பும் காத்து கொண்டிருக்கின்றது. 

ஆஸ்ட்ரோ வானொலியின் மார்க்கெட்டிங் பொது மேலாளர், டாப்னே லூர்து, கூறுகையில், "SYOK செயலியை அனைத்து மலேசியர்களுக்கு அறிமுகப்படுத்துவதில் ஆஸ்ட்ரோ வானொலி மகிழ்ச்சி கொள்கிறது. ரசிகர்கள் இடைவிடாத தங்களுக்கு பிடித்த அனைத்து வானொலி பிராண்டுகளையும் இசையும் கேட்டு மகிழலாம். இச்செயலியில் மலேசியர்கள் உள்ளூர் காணொளிகளை அனுபவிக்கலம். அவ்வகையில்  மலேசியர்களுக்காக மலேசியர்களால் உருவாக்கப்பட்ட SYOK அசல்கள் மற்றும் எங்களுடைய நேயர்களுக்கு பல்வேறு பிரபலங்கள் தலைப்புகள் உள்ளடக்கிய பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட போட்காஸ்ட்கள் இச்செயலியில் பெறலாம். SYOK மூலம் மலேசியர்கள் டிஜிட்டல் வானொலியின் புதிய அனுபவத்தைப் பெறுவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்”. 

கூகுள் பிளே அல்லது ஆப் ஸ்டோர் வாயிலாக SYOK app பதிவிறக்கம் செய்யலாம் அல்லது SYOK இணையதளத்தை வலம் வருங்கள்.