CLOSE
CLOSE AD

பிரபலத் தொலைக்காட்சி தொகுப்பாளினிகளின் திருமணம வைபவம்

  • 03 May 2016
ப-ரபலத்-த-ல-க்க-ட்ச-த-க-ப்ப-ள-ன-கள-ன்-த-ர-மணம-வ-பவம்

தொலைக்காட்சி தொகுப்பாளினிகள் பலர் தங்கள் திறமையால் பல ரசிகர்களின் மனதில் குடி கொண்டுள்ளனர். இவர்கள் அடுத்தடுத்து என்ன செய்கிறார்கள் என இவர்களின் சமூக வளைதளங்களை பின்பற்றுவோர் பலர். இவர்களில் பலர் தங்கள் மனதிற்கு பிடித்தவருடன் திருமண வாழ்க்கையில் இணைந்து விட்டனர் என்று தெரியுமா?

இவர்களின் காதல், நிச்சயம் மற்றும் திருமணம் வரை இவர்கள் எப்படி சந்தித்தார்கள், இணைந்தார்கள் என்பதை அறிந்துக் கொள்வதற்காகவே ஊடகங்கள் பல காத்துக் கிடந்தன. பலரின் திருமணம் ரசிகர்களால் தங்கள் வீட்டு கல்யாணம் போல் கொண்டாடப்பட்டது.நிஷா & கணேஷ் வெங்கட்ராமன்
வேந்தர் டிவியில் ஒரு திருமண நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் போது சந்தித்துக் கொண்ட இருவரும் பிறகு காதலிக்கத் தொடங்கினர். ஆத்ம துணையில் அதிக நம்பிக்கை கொண்ட கணேஷ் தனக்கு அப்படி ஒரு துணை கிடைப்பது சாத்தியமா என்று என்ணும் போதுதான் நிஷாவுடனான காதல் அதை உண்மை என்று நிரூபித்தகாகக் கூறினார்.திவ்யதர்ஷினி & ஸ்ரீகாந்த் ரவிசந்திரன்


சென்னை வாழ் திரைப்பட உலகச் சேர்ந்த ஸ்ரீகாந்த், கௌதம் மேனனின் உதவி இயக்குநர் ஆவார். திவ்யதர்ஷினி மற்றும் ஸ்ரீகாந்த் ரவிசந்திரன் 5 வருடங்களுக்கு மேலாக ஒருத்தரை ஒருத்தர் புரிந்துக் கொள்ள, இருவரின் நட்பை அடுத்த படிக்குக் கொண்டு சென்றனர் இரு வீட்டர். விஜய் டி.வியில் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் தொகுப்பாளியான திவ்யதர்சினி பலரின் செல்லப்பிள்ளை என்றே அழைக்கப்பட்டார். இவர்கள் இருவரின் திருமணம் பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்ட ஒக்ரு கோலாகல விழாவாக இருந்தது.கல்யாணி & ரோஹிட்


குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமான கல்யாணி, ' அள்ளித் தந்த வானம்' 'ஜெயம்' போன்ற படங்களில் நடித்துள்ளார். பிறகு தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய இவர், இப்பொழுது சின்னத்திரை நாடகங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.அஞ்சனா & சந்திரமௌலி


சன் மியூசிக் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கும் அஞ்சனாவிற்கு அவ்வளவு ரசிகர்கள். சன் நெட்வர்க்கின் வியாபாரப் பிரிவில் வேலைசெய்து கொண்டிருந்த சந்திரமௌலி ' கயல்' திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். பல வருடங்களாக ஒருத்தரை ஒருத்தர் தெரிந்துக் கொண்டிருந்த இருவரும் இன்று தம்பதிகளாக வாழ்கின்றனர்.கீர்த்தி & சந்தனு


பிரபல திரைப்பட நடன இயக்குநனரான ஜெயந்தியின் மகளான கீர்த்தி, தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக உள்ளார். சிறுவயது முதலே பாக்கியராஜின் மகனான சந்தனுவும் கீர்த்தியும் நட்பாக பழக இந்த நட்பு காதலாக மாறியது. இவர்களின் காதலை உடநே அமோதித்தப் பெற்றோர்கள் இவர்களின் திருமணத்தை வெகு விமரிசையாக நடத்தினர்.

பிரியங்கா & பிரவீன்


தன்னுடைய திறமையாலும் நகைச்சுவை உணர்வாலும் பலரின் மனதில் இடம்பிடித்துள்ள பிரியங்க சூப்பர் சிங் 5 - இன் உதவி இயக்குனரான பிரவீனை காதல் திருமணம் புரிந்துக் கொண்டார். மோதலில் பார்த்த இவர்களின் உறவு காதலாக மலர்ந்து திருமணத்தில் தொடங்கியுள்ளது.ஐஸ்வர்யா பிரபாகர் & பிரனேஷ்


சன் டிவியில் அமுல் சூப்பர் குடும்பம், சன் குடும்பம் விருது போன்ற நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிய ஐஸ்வர்யா சென்னையில் பிறந்தவர். இவரின் பின்னணி என்னவெண்ரு தெரியாமல் தன்னை பெண் பார்க்க வந்த பிரனேஷை பிடித்து விட்டதாக கூறுகிறார் இவர். பெற்றோர்கள் பார்த்து வைத்த திருமணமாம் இது. அமெரிக்காவில் தொழில்நுட்பத் துறையில் வேலை செய்யும் இவர், சென்னை வந்து ஐஸ்வர்யாவை நேரில் பார்த்து திருமணத்திற்கு சம்மதம் வாங்கினாராம்.பாவனா & நிகில்


சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் பாவனா தன் அண்டை வீட்டுக்காரரான நிகிலை பெற்றோர்கள் நிச்சயித்து திருமணம் செய்து கொண்டார். திருமணம் ஆகி புக்கட் தீவிற்கு தேனிலவிற்கு போன பின்புதான் சூபர் சிங்கர் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க வாய்ப்பு கிடைத்தது இவருக்கு. திருமணத்திற்குப் பிறகு சிங்கப்பூரில் வேலை செய்து வந்த நிகில் தற்பொழுது மும்பைக்கு வேலை மாற்றலாகி வந்துள்ளார்.புகைப்பட மூலம்: www.ezwed.in, www.shopzters.com, www.ibtimes.co.in , www.shopzters.com, allcinegallery.com, www.scooptimes.com