விடைப்பெற்றார் மயில்
பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மறைவு இந்திய சினிமாவை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பாலிவூட்டின் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்பட்ட அவர் தமிழ் சினிமா ரசிகர்களால் ‘மயில்’ என்று கொண்டாடப்பட்டவர்.
அவரை பற்றி ஆஸ்ட்ரோ உலகம் திரட்டிய தகவல்கள் இதோ:
- தமிழகத்தில் உள்ள சிவகாசியில் 1963 ஆம் ஆண்டு பிறந்தவர்
- 1969-ம் ஆண்டு வெளியான துணைவன் திரைப்படத்தில் குழந்தைநட்சத்திரமாக அறிமுகமானார். இதில் முருகனாய் கதாபாத்திரம் ஏற்றார்.
- தனது 13ஆம் வயதிலேயே கதாநாயகியாக ‘மூன்று முடிச்சு’ திரைப்படத்தில் கே.பாலச்சந்தரால் அறிமுகப்படுத்தப்பட்டார்.
- தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ஹிட் படங்கள் கொடுத்துவந்த நடிகை ஸ்ரீதேவி இந்தி திரையுலகிலும் நுழைந்து புகழ்பெற்றார். சொல்வா சாவன் என்ற இந்தி படத்தில் முதன்முதலில் அறிமுகமானார்.
- 2004ம் ஆண்டில் மாலினி ஐயர் தொலைக்காட்சி தொடரில் நடித்துள்ளார்.
- நீண்ட இடைவெளிக்கு பின்னர் 2012ம் ஆண்டில் இங்கிலீஷ் விங்லீஷ் மூலம் சினிமாவில் மீண்டும் நடிக்க வந்த அவர் ரசிகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்டார்.
- 2012 ல் டாப் 10 பாலிவுட் நடிகைகள் பட்டியலில் முதலிடம் பிடித்ததற்காக பல விருதுகளை பெற்றுள்ளார்.
- அவர் கடைசியாக நடித்த தமிழ்த்திரைப்படம் புலி. இந்தியில் இவர் கடைசியாக நடித்த திரைப்படம் ‘மாம்’ .
- இவர் பெற்ற விருதுகள் :
- 2013 ல் பத்மஸ்ரீ விருது
- 4 முறை சிறந்த நடிகைக்கான பிலிம்ஃபேர் விருதுகள்.
- 2 முறை பிலிம்ஃபேர் சிறப்பு விருது
- 1981 ல் மூன்றாம் பிறை படத்திற்காக தமிழக அரசின் சிறந்த நடிகைக்கான விருது
- 2013 ல் இங்கிலீஷ் விங்கிலீஷ்., படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகை விருது.
- 2013 ல் என்டிடிவி விருது
- 2013 ல் இந்தியா டுடேவின் கலைத்துறையில் சிறந்த பெண் விருது
- 2013 ல் இந்திய சினிமாவின் பேரரசி விருது
- 2015 ல் புலி படத்திற்காக சிறந்த வில்லி விருது
நம் மனதில் நின்ற சில கானங்கள்:
1. Devi Sridevi - Valve Maayam
2. Katril Enthan Geetham - Jhonny
3. Sirpi Irukuthu - Varumayin Niram Sivappu
4. Aattukutti Muttayittu - 16 Vayathinile
5. Kanne Kalaimane - Moondram Pirai
Credit: Thinatanthi and Rediff