நீங்கள் என்னதான் மின்சார சாதனங்களை உபயோகிப்பதைக் குறைத்தாலும் மாதம் தோறும் வரும் மின்சாரக் கட்டணம் குறையாமல் மேலும் அதிகரிக்கின்றதா?

அதற்குப் பின்வரும் சாதனங்களும் ஒரு காரணமாக இருக்கலாம்...

1. தொலைப்பேசி மின்னூட்டி (charger)

நாம் தொலைப்பேசியின் மின்னூட்டியைப் பயன்படுத்தாவிட்டாலும் அதை சுவிட்சில் இணைத்திருந்தாலே அது மின்சாரத்தை உபயோகிக்கும்.

2. தொலைக்காட்சி

நாம் தொலைக்காட்சியை அணைத்தாலும் அது காத்திருப்பு முறையில் (stand-by mode) மின்சாரத்தை உபயோகிக்கும்.

3. கணினிகள் மற்றும் மடிக்கணினிகள்

கணினிகள் மற்றும் மடிக்கணினிகளை முழுமையாக அணைத்தாலும் அவை மின்சாரத்தை உபயோகிக்கும். இவற்றை முழுமையாக அணைக்காமல் காத்திருப்பு முறையில் வைத்தால் இதன் மின்சார நுகர்வு இன்னும் அதிகரிக்கும்.

4. நேரக்காட்டியுடன் இணைத்தச் சாதனங்கள்

நேரம் அல்லது டைமருடன் இணைத்தச் சாதனங்களை நாம் அணைத்தாலும் அது மின்சாரத்தை உபயோகிப்பதை நிறுத்தாது.

இப்படி அனாவசியமாக மின்சாரம் வீண் போவதைத் தவிர்க்க இக்கருவிகளை சுவிட்சில் இருந்து அகற்றுவது சிறப்பு. இதனால் உங்களின் மாத மின்சாரக் கட்டணமும் குறையும்.

Sourced from: Bright Side
Images credit: Bright Side and Pinterest