நம்மில் பலர், ஒரு நாளில் எவ்வளவு உணவை விரயம் செய்கிறோம் என்று உணராமலேயே இருக்கிறோம்.

மலேசியாவில் ஒரு நாளுக்கு சுமார் 15,000 டன் உணவை வீண் விரயம் செய்வதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. ஆகவே, இந்த உணவு விரயம் மீதான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆஸ்ட்ரோ உறுதுணை #மனமிறங்குவோம் எனும் உணவு சேகரிப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

இந்த #மனமிறங்குவோம் உணவு சேகரிப்புத் திட்டத்தின் வாயிலாக கடந்த நவம்பர் 12-ஆம் தேதி தொடங்கி நவம்பர் 16-ஆம் தேதி வரை பிரிக்பீல்ட்ஸ், கிள்ளான், மஸ்ஜிட் இந்தியா மற்றும் லுலு ஹைப்பர்மார்க்கேட் பகுதிகளில் பொதுமக்கள் சமையல் எண்ணெய், அரிசி, பிஸ்கட், ஓட்ஸ் போன்ற பொருட்களை வழங்கினார்கள்.

பொதுமக்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட உணவுப் பொருட்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட 5 ஆதரவற்ற இல்லங்களுக்கு சனிக்கிழமை 17-ஆம் தேதி சுபாங் ஜெயாவில் அமைந்துள்ள யூஎஸ்ஜே மைடின் பேரங்காடியில் வழங்கப்பட்டது. அவ்வகையில் Sincere Care Home, Sasthi Blessings Care Centre, Sri Sayang Welfare Home, Pusat Jagaan Rumah Ozanam மற்றும் Rumah SVP Klang ஆகிய ஆதரவற்ற இல்லங்கள் இத்திட்டத்தின் வாயிலாக பயனடைத்தார்கள்.

தீபாவளியை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் உள்ளூர் கலைஞர்களின் படைப்புகள் மற்றும் குழந்தைகளுக்கு வர்ணம் தீட்டும் போட்டி இடம்பெற்றது.