எதிர்வரும் ஜுன் 12-ஆம் தேதி தொடக்கம் ஆஸ்ட்ரோ அலைவரிசையில் தமிழ்ச்செய்தி ஒளியேறவுள்ளது. ஒவ்வொரு நாளும் இரவு 8.30 மணி ஆஸ்ட்ரோ விண்மீன் எச்.டி அலைவரிசை 231 ‘ஆஸ்ட்ரோ செய்திகள்’ என்ற பெயரில் நேரடி ஒளிபரப்பாகும்.

இச்செய்தியின் மறு ஒளிபரப்பு இரவு 10.30 மணிக்கு ஆஸ்ட்ரோ வானவில் அலைவரிசை 201-இல் ஒளியேறும். அதுமட்டுமின்றி, ஆஸ்ட்ரோ உலகம் www.astroulagam.com.my இணையத் தளத்தின் வாயிலாகவும் இச்செய்திகளைக் கண்டு களிக்கலாம்.