இந்து சமயத்தில் விரதம் இருப்பது முக்கியமான அம்சமாகும். அதாவது குறிப்பிட்ட நேரங்களில் எவ்வித ஆகாரத்தையும் உண்ணாமல் இருப்பது. இந்து சமயத்தில் ஏன் விரதத்திற்கு முக்கியத்துவம் தருகின்றனர் என்பது தெரியுமா? ஆஸ்ட்ரோ உலகம் அதற்கான விளக்கத்தைத் தருகிறது.
பரப்பரப்பான இன்றைய சூழலில் பலர் சரியான நேரத்தில் உணவை உட்கொள்வதில்லை. அதோடு சுலபமாக செரிமானமாகாத உணவுகளையும் அதிகம் உண்கின்றனர். இதனால் முறையற்ற செரிமானப் பழக்கம் உண்டாக்குகிறது. இது அக்னி எனக் கூறப்படுகிறது.
முழுமையாக அல்லது அதிகமாக சமைக்கப்பட்ட உணவினால் அமா எனும் உடலில் அதிகமான கழிவுகள் சேர்கின்றன.
இவ்வாறு முறையற்ற அக்னியும் அதிக அமாவும் பல நோய்களை உண்டாக்குகின்றன என்கிறது ஆயுர்வேதம். இதனால் தான் ஆயுர்வேதம், வழக்கமாக குறைந்த கால அவகாசத்தில் விரதம் எடுக்கும்படி வலியுறுத்துகிறது. இது அக்னியை அதிகரித்து அமாவை குறைக்க உதவும்.
விரதம் எடுப்பதால் ஜீரண உறுப்புகள் ஓய்வு பெறுவதால் உடல் இலகுவாகுகிறது, மூளையின் சக்தியை அதிகரிக்கிறது. சமஸ்கிருதத்தில் விரதம் என்பது உபவாசம் என அழைக்கப்படுகிறது. உப என்றால் அருகில் என்றும் வாசம் என்றால் இருத்தல் என்றும் அர்த்தம். அதாவது உபவாசம் என்பது இறைவனின் அருகில் இருத்தல் என்று பொருள்படும்.
விரதம் மேற்கொள்வதால் இரத்த அழுத்தம் சீர் அடைகிறது; உடல் எடை குறைகிறது; உண்ணும் பழக்கம் முறையாகிறது; ஜீரண சக்தி அதிகரிக்கப்பட்டு நீண்ட நாள் உயிர் வாழ இது வழி வகுக்கிறது.
அதே நேரத்தில் விரதம் மேற்கொள்பவர்கள் தங்களின் உடல்நிலையை கவனத்தில் கொள்ளுதல் அவசியம். தவறான அணுகுமுறை உடல்நிலையைப் பாதிக்கும்.
புகைப்பட மூலம்: Ayurveda Ireland, Zee News India, Life Hope and Truth