முருங்கை கீரை உடலுக்கு மிகவும் ஆரோக்கியமான உணவு என்பது அனைவரும் அறிந்ததே. இந்த முருங்கை கீரையை பெரியவர்கள் விரும்பி உண்டாலும் குழந்தைகளுக்கு கீரை என்றாலே அலர்ஜி தானே.
கீரையை அப்படியே சமைத்துக் கொடுக்கும் போதுதான் பிள்ளைகளுக்கு பிடிக்காமல் போகிறது. கீரை கூட்டும் சீரை சூப், கீரை குழம்பு என வித்தியாசமாக சமைத்துக் கொடுத்தால் குழந்தைகள் கண்டிப்பாக உண்பார்கள்.
முருங்கை கீரை கூட்டு
தேவையான பொருட்கள்
- முருங்கை கீரை - 2 கப்
பருப்பு - 1/3 கப் - மஞ்சள் தூள் - 1.2 தேக்கரண்டி
- உப்பு தேவையான அளவு
- வெங்காயம் - 1 நறுக்கியது
- தக்காளி - 1 நறுக்கியது
- நீர் - தேவையான அளவு
அரைக்கத் தேவயான பொருட்கள்
- துறுவிய தேங்காய் - 1/3 கப்
- பச்சை மிளகாய் - 2 நறுக்கியது
- சீரகம் - 1 தேக்கரண்டி
தாளிக்கத் தேவையான பொருட்கள்
- எண்ணை - 1 மேஜைக்கரண்டி
- கடுகு - 1 தேக்கரண்டி
- சிகப்பு மிளகாய் -
- உளுந்து - 2 மேசைக்கரண்டி
செய்யும் முறை
1) பருப்புடன் நீர் ஊற்றி, மஞ்சள் தூள் சேர்ந்து நன்றாக வேகவைத்து இறக்கவும்.
2) அரைக்கத் தேவையான பொருட்களை ஒன்றாக சேர்ந்து அரைக்கவும்
3) சட்டியில் எண்ணை சூடேறியதும், கடுகு, உளுந்து, சிகப்பு மிளகாய் போட்டு தாளிக்கவும்.
4) நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளி போட்டு வதக்கவும்
5) பின் தேவையான அளவு உப்பு, மஞ்ச்ள தூள் மற்றும் நறுக்கிய முருங்கை கீரையை சேர்த்து வதக்கவும்.
6) தேவையான அளவு நீர் விட்டு 10 நிமிடத்திற்கு வேகவைக்கவும்.
7) முருங்கை கீரை வெந்ததும், வெந்த பருப்பு மற்றும் அரைத்த கலவையை சேர்ந்து கிண்டவும்.
8) தேவையான அளவு உப்பு போட்டு தேவையான அளவு நீர் விட்டு மீண்டும் 2 இமிடத்திற்கு வேக வைக்கவும்.
9) கூட்டு நன்றாக வெந்ததும் இறக்கவும்.
10) முருங்கை கீரை கூட்டு பரிமாறத் தயார்.
புகைப்பட மூலம்: Subbus Kitchen