முருகன் ஏன் சேவலை தன் கொடியின் சின்னமாக கொண்டுள்ளார்?
கொடி என்பது பெருமையின் சின்னம்.
neo
Mon Jan 27 2025
கொடி என்பது பெருமையின் சின்னம். ஒரு சாம்ராஜ்ஜியத்தின் கொடி ஒரு நாட்டில் பறக்கவிடப்பட்டால் அந்நாடு அந்த சாம்ராஜ்ஜியத்திற்கு உட்பட்டது என்பார்கள். அவ்வகையில் முருகன் ஏந்தியிருக்கும் சேவற்கொடி அவனின் துதி பாடும் என்பார்கள்.
புராணக் கதையின் படி மாமரமாய் இருந்த சூரபத்மனை முருகன் தன் வேல் கொண்டு இரண்டாக அறுத்தான். இரண்டாய் பிளந்த சூரபத்மனின் உடல் பாகம் மயிலாகவும், சேவற்கொடியாகவும் மாறியது.
ஆனால் ஏன் முருகன் சேவலை தன் கொடியின் சின்னமாக கொண்டுள்ளான் என்ற காரணம் தெரியுமா?
இந்த சேவல் சின்னம் மிக உயரிய தத்துவத்தைக் கொண்டுள்ளது. கொக்கரக்கோ என கூவும் சேவலின் ஒலியின் பின் மறைந்திருக்கும் தத்துவம் என்ன என்பதை சுல்தான் இட்ரிஸ் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் திரு கார்த்திகேஸ் பொன்னையா விளக்குகிறார்.