காதலில் ஐந்து வகை உண்டு. அவை பின்வருமாறு...
1. ஏரோஸ் (Eros): இந்த வகை காதல் உடல் ரீதியான ஈர்ப்பு மூலம் வருவது. மன ரீதியான தொடர்பு குறைவாகவே இருக்கும். ஆரம்ப கட்டத்தில் வேகமாகக் காதலிக்கும் இவர்களது காதல் போகப் போக தொய்வு அடைந்துவிடும்.
2. லூட்ஸ் (Ludus): இந்த வகை காதலர்களுக்குள் பெரிதாக கமிட்மெண்ட் இருக்காது. போதுமான அளவே உறவில் இருக்கும் இவர்கள் அந்தரங்க விஷயங்களை அதிகம் பகிர விரும்பமாட்டார்கள்.
3. மேனியா (Mania): எந்த நேரமும் தன் துணையை கண்காணித்துக் கொண்டும் கட்டுப்படுத்திக் கொண்டும் இருப்பவர்கள். இவர்களுக்கு தங்கள் துணையின் மீதுள்ள நம்பிக்கை சற்று குறைவாகவே இருக்கும்.
4. அகப்பே (Agape): இந்த வகை காதலர் கிடைத்தால் தவற விட்டுவிட வேண்டாம். காரணம் துணைக்கு சுதந்திரம் தர முற்படுபவர்கள். நேர்மையாகக் காதலிப்பார்கள். எல்லையற்ற காதல் கொண்டிருக்கும் இவர்கள் துணைக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்திடுவார்கள்.
5. பிரக்மா (Pragma): பிராக்டிகல் காதலர்கள். உள்ளதை உள்ளபடி கூறுபவர்கள். இது சரி, இது தவறு எனச் சுட்டிக்காட்டுபவர்கள். காதல் தவிர, பொருளாதார நிலை, குடும்பப் பின்னணி, கலாச்சாரம் என அனைத்து விஷயத்தையும் சீர்தூக்கிப் பார்த்து காதலிப்பவர்கள்.
Sourced from: Lankasri
Image credit: Pinterest