நாம் வசிக்கும் வீட்டை அழகாக வைத்திருக்க தூய்மையைப் போலவே அலங்காரமும் முக்கியப் பங்கு வகிக்கின்றது. இதற்கு பெரிய செலவாகும் என்ற அச்சம் உங்களுக்கு வேண்டாம். குறைந்த செலவில் வீட்டை அலங்காரம் செய்யும் வழிகள் என்னவென்று பார்க்கலாம்.
1. போட்டோ ஃப்ரேம்
இந்த ஃப்ரேமில் அழகான தருணங்களை நினைவூட்டும் போட்டோக்களை வைத்து வீட்டின் சுவர்களில் தொங்கவிட்டால், வீட்டை அலங்கரிப்பதோடு மட்டுமல்லாமல், அவற்றைப் பார்த்தால் மனதில் ஒரு குதூகலம் பொங்கும்.
2. ஓவியங்கள்
வித்தியாசமாகவும், கண்ணைக் கவரும் வகையிலும் உள்ள ஓவியங்களை அறைகளின் சுவர்களில் தொங்கவிட்டால், வீடே சிம்பிளாகவும் அழகாகவும் காணப்படும்.
3. பூ ஜாடிகள்
வீட்டை, விலை மலிவான பொருட்கள் கொண்டும் அலங்கரிப்பதில் பூ ஜாடிகள் முதன்மையானதாக உள்ளன.
4. செடிகள்
வீட்டுத் திண்ணை அல்லது நுழைவாயிலில் விருப்பமான உள்ளரங்கு செடிகளை வைத்து அலங்கரிக்கலாம்.
5. மெதுக்கை (sofa)
வீட்டின் மெதுக்கை மீது அழகான குஷன்களை ஆங்காங்கு வைத்து அலங்கரிக்கலாம்.
6. திரைச்சீலைகள்
வீட்டின் ஜன்னல்களில் அழகான திரைச்சீலைகள் கொண்டும் அலங்கரிக்கலாம்.
Sourced from: Manithan
Images credit: Pinterest and Flicker