மலேசியாவில் மிகவும் பிரபலமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar) ஸ்ட்ரீமிங் சேவை 2021 ஜூன் 1 அறிமுகக் காண்பதை முன்னிட்டு, அதன் அதிகாரப்பூர்வ விநியோகஸ்தராக The Walt Disney Company ஆஸ்ட்ரோவை நியமித்ததை அறிவிப்பதில் ஆஸ்ட்ரோ பெரும் மகிழ்ச்சியடைகிறது.
800-க்கும் மேற்பட்டத் திரைப்படங்களையும் 18,000-க்கும் அதிகமான அத்தியாயங்களையும் கொண்ட டிஸ்னியின் அற்புதமான உள்ளடக்கங்களை டிஸ்னி+ ஹாட்ஸ்டார் செயலியின் வாயிலாக ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள் ஸ்ட்ரீம் செய்து மகிழலாம்.
ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்களுக்கு ஒரே தளத்தில் அனைத்து பொழுதுபோக்கு வசதிகளையும் வழங்கும் வண்ணம் இவ்வாண்டு இறுதிக்குள் அல்ட்ரா மற்றும் அல்டி இணைக்கப்பட்டப் பெட்டிகளின் வழியாக டிஸ்னி+ ஹாட்ஸ்டாரைக் கிடைக்கப் பெறச் செய்வதில் ஆஸ்ட்ரோ செயல்பட்டு வருகின்றது.
ஆஸ்ட்ரோ குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, ஹென்றி டான் கூறுகையில், “மலேசியாவில் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் அதிகாரப்பூர்வ விநியோகஸ்தராக இருப்பதிலும், எங்கள் தளத்தில் அதிகமான உலகத் தரம் வாய்ந்த உள்ளடக்கங்களைத் திரட்டி எங்களின் வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதிலும் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். மிகவும் விருப்பத்தக்க ஆஸ்ட்ரோவின் பிரபல நிழ்ச்சிகள், புகழ் பெற்ற உள்ளூர் நிழ்ச்சிகள், விருது வென்ற அசல் நிழ்ச்சிகள் மற்றும் இணையற்ற நேரலை விளையாட்டுகளோடு கூடுதலாக டிஸ்னி+ ஹாட்ஸ்டாரிலிருந்துத் திகைப்பூட்டும் சிறந்த நிகழ்ச்சிகளை மிக விரைவில் வாடிக்கையாளர்கள் கண்டுக் களிக்கலாம். இதன்வழி, மலேசியர்களின் மறுக்கமுடியாதப் பொழுதுபோக்குத் தளமாக நாங்கள் உருவாகிறோம்.”
“ஒவ்வொரு மாதமும் கூடுதலாக ரிம5 கட்டணம் செலுத்தி டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் உலகத் தரம் வாய்ந்தப் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை ஆஸ்ட்ரோவின் திரைப்படத் தொகுப்பு வாடிக்கையாளர்கள் விரைவில் ஸ்ட்ரீம் செய்யலாம். பிற வாடிக்கையாளர்கள் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரை மற்ற சலுகைகள் வழியாகக் கண்டு மகிழலாம். நாங்கள் சந்தா அடிப்படையிலான வீடியோ ஆன் டிமாண்ட் (எஸ்.வி.ஓ.டி) ஸ்ட்ரீமிங் சேவைகளை ஒருங்கிணைத்து, எங்களின் வாடிக்கையாளர்களுக்குப் பல்வேறு வகையானப் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளின் தேர்வுகள், மதிப்பு மற்றும் வசதியை ஏற்படுத்தித் தருகிறோம். அதிரடிச் செயல்கள் நிரம்பிய ஆண்டிற்கான ஒரு சிறந்தத் தொடக்கமாக இது அமையும்.”
தைவான், ஹாங் காங் மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் The Walt Disney Company-இன் பொது நிர்வாகி, டேவிட் ஷின் கூறுகையில், “பயனர்களுக்காக டிஸ்னி+ ஹாட்ஸ்டாரை மலேசியாவில் அறிமுகப்படுத்துவதிலும் ஆக்கப்பூர்வமானப் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை வழங்கும் முக்கிய நோக்கில் ஆஸ்ட்ரோவுடன் இணைந்து பணியாற்றுவதிலும் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.
"டிஸ்னி கிளாசிக் முதல் புத்தம் புதிய டிஸ்னி+ அசல் தொடர் வரை; உள்ளூர் படைப்பாளிகள், இயக்குநர்கள் மற்றும் திறமைசாலிகளின் புகழ் பெற்ற மலேசிய நிகழ்ச்சிகள்; மற்றும் ஆசியத் திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் என அனைத்து வயதினர்களுக்கும் ஏற்ற நிகழ்ச்சிகள் கைவசம் உள்ளன.”
அனைத்துலகம் மற்றும் மலேசியாவின் புகழ் பெற்ற நிகழ்ச்சிகளின் பிரத்யேக ஸ்ட்ரீமிங் மையமாக, டிஸ்னி+ ஹாட்ஸ்டார் திகழ்கின்றது. Disney, Marvel, Star Wars, Pixar, National Geographic, FX, 20th Century Studios ஆகியவற்றிலிருந்துப் பிளாக்பஸ்டர் ஹாலிவுட் திரைப்படங்கள் மற்றும் விருது வென்ற உள்ளடக்கங்களோடு முன்னணி மலேசிய ஸ்டுடியோக்களிலிருந்துப் பிரத்தியேக முதல் ஒளிபரப்புகள் மற்றும் பிளாக்பஸ்டர்களையும் இது ஒன்றிணைக்கிறது.
The Mandalorian, WandaVision மற்றும் The Falcon and The Winter Soldier ஆகியத் தொடர்களும் Avengers: Endgame, Aladdin மற்றும் Frozen 2 ஆகியத் திரைப்படங்களும் உள்ளிட்டப் பல்வேறு அசல் நீண்டத் திரைப்படங்கள், நேரலை-அதிரடி மற்றும் அனிமேஷன் தொடர்கள், குறுகிய வடிவ உள்ளடக்கம் மற்றும் ஆவணப்படங்கள் போன்ற வணிகம் அல்லாத நிகழ்ச்சிகளை வழங்கும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் இணையம் இணைக்கப்பட்ட சாதனங்களில் கிடைக்கப் பெறும்.
J2: J Retribusi, Zombitopia, Ada Hantu, Ejen Ali, Upin & Ipin மற்றும் பல விருது வென்ற மலேசியச் சினிமா வெளியீடுகளையும் புகழ் பெற்ற உள்நாட்டு நிழ்ச்சிகளையும் உள்ளடக்கிய விரிவான நிகழ்ச்சிச் சார்ந்த நூலகத்தை டிஸ்னி+ ஹாட்ஸ்டார் கொண்டிருக்கும்.
மே 4 முதல் +603-95433838 எனும் புலனம் எண்கள், அலைவரிசை 200, astro.com.my/Disney எனும் அகப்பக்கம், அங்கீகரிக்கப்பட்டச் சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் மூலமாக வாடிக்கையாளர்கள் 2021 ஜூன் 1 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரை உள்ளடக்கிய ஆஸ்ட்ரோ திரைப்படத் தொகுப்பிற்குப் பதிவுச் செய்யலாம்.
Shuman
Tue May 04 2021

Unna Vida | Aadhira | Theme Song
A heartwarming song that beautifully captures the soul of the series Aadhira.
Let the melody take you through the emotional journey of a woman’s strength, resilience, and hope.
🎶 Music Composer: Neroshen Thanaseharan
✍🏼 Lyrics: Oviya Oommapathy
🎤 Singers: Deena Dakshini, Shan, Yasmin JK
Don’t miss Aadhira, premiering 14 July at 9PM on Astro Vinmeen (Ch 202).
Also available on Astro GO, On Demand, and sooka.
Let the melody take you through the emotional journey of a woman’s strength, resilience, and hope.
🎶 Music Composer: Neroshen Thanaseharan
✍🏼 Lyrics: Oviya Oommapathy
🎤 Singers: Deena Dakshini, Shan, Yasmin JK
Don’t miss Aadhira, premiering 14 July at 9PM on Astro Vinmeen (Ch 202).
Also available on Astro GO, On Demand, and sooka.