இன்றைய இயந்திரமயமான வாழ்க்கைச் சூழலில் நாம் நம் உடலுக்கும் ஆரோக்கியத்துக்கும் தேவையான பல விஷயங்களைத் தவறவிடுவது சகஜமாகிவிட்டது.

நேரத்துக்குச் சாப்பிடாமல், தூங்காமல் தொழில், கல்வி, லட்சியம் என்ற இலக்கை நோக்கி பயணிக்கும் நமது வாழ்க்கையில் நாம் பல முக்கியமான முக்கியமான விஷயங்களை தவறவிட்டு விடுகிறோம்.

உடற்பயிற்சியும், சரியான உணவுப் பழக்கம் மற்றும் சரியான தூக்கமின்மையால் நம்மில் பலருக்கு இளமையிலேயே உடற்பருமன், நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, பக்கவாதம் என்று நோய்களின் வரிசை நீள்கிறது.

இவற்றையெல்லாம் தவிர்க்க வேண்டுமென்றால், உடற்பயிற்சி செய்வதுதான் சிறந்த வழி. உடற்பயிற்சி எவ்வளவு அவசியமானது, உடலுக்கும் மனதுக்கும் அது எவ்வளவு நன்மைகளைச் செய்கிறது, இதனால் நமது தினசரி வாழ்க்கை எவ்வாறு மாற்றம் அடைகிறது என்பது குறித்துப் பார்ப்போம்.
  1. நடை பயிற்சி, மெது ஓட்டம், ஓட்டம், நீச்சல் போன்ற இதயத்துக்குப் பலம் தரும் பயிற்சிகள் செய்வதால், உடலில் உள்ள திசுக்களுக்கு அதிக அளவு ரத்தம் கொண்டுசெல்லப்பட்டு அதன் மூலம் நமது உடலுக்கு ஆக்சிஜன் கிடைக்கிறது.
  2. சுவாசம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் குணமடைய உதவுகிறது.
  3. நாளமில்லா சுரப்பிகள் புத்துணர்ச்சி பெறுகிறது
  4. அதிகப்படியான கலோரிகள் / கெட்ட கொழுப்புச்சகளை எரிக்க உதவுகிறது (1 மணி நேரம் வேகமாக நடக்கும்போது உடலில் 300 கலோரி வரை குறைகிறது)
  5. எலும்புகள் வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கிறது
  6. உடலை உறுதியாக வைத்திருக்க உதவுகிறது
  7. பல நோய்களைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்து உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்கிறது

Image credit: DrPhilMaffetone and WomenHealthyMag