“தமிழுக்கு அமுதென்று பேர்
அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்!”
உங்கள் பேச்சுத் திறமையையும் தமிழ் ஆற்றலையும் வெளிப்படுத்த ஒரு களம்-தமிழ் அமுதம் பேச்சுப் போட்டி 2023!
ஆஸ்ட்ரோ உலகம், ஆஸ்ட்ரோ வானவில் இணைந்து வழங்கும் இப்போட்டியில்,
9 வயதிலிருந்து 12 வயதுக்கு உட்பட்ட மலேசியர்கள் கலந்து கொள்ளலாம்.
மூன்று கட்டங்களை உட்படுத்திய இப்போட்டியின் விவரம் பின்வருமாறு:
முதல் கட்டம் (Phase 1)
1. போட்டியாளருக்கு விருப்பமான தலைப்பில் வேற்று மொழி கலப்பில்லாமல், தமிழ் மொழியில் ஒரு நிமிடத்திற்குள் பேசி காணொலி ஒன்றைப் பதிவு செய்ய வேண்டும்.
2. அக்காணொலியைப் போட்டியாளரின் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் சமூக ஊடகத்தில் பதிவேற்ற வேண்டும். பதிவிடப்படும் ஊடகக் கணக்கு பொதுவில் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
3. www.astroulagam.com.my அகப்பக்கத்தில் உள்ள போட்டி பதிவுப் பாரத்தையும் கோரப்பட்ட அனைத்து விபரங்களையும் பூர்த்தி செய்து 20 ஜூலை தொடங்கி 10 ஆகஸ்ட், மாலை 5 மணிக்குள் அனுப்ப வேண்டும்.
இரண்டாம் கட்டம் (Phase 2)
முதலாம் கட்டத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டப் போட்டியாளர்கள் இரண்டாம் கட்டத்தில் நேருக்கு நேர் சவாலில் சரவெடி நைட் நிகழ்ச்சியில் போட்டியிடுவர்.
மூன்றாம் கட்டம் (Phase 3)
இரண்டாம் கட்டத்தில் வெற்றிப் பெற்ற பத்து போட்டியாளர்கள் இறுதி கட்டத்திற்கு அனுப்பப்படுவர்.
போட்டியாளர்களுக்கு மாபெரும் பரிசு தொகைகள் காத்திருக்கின்றன!
முதல் பரிசு: ரிங்கிட் மலேசியா 5000
இரண்டாம் பரிசு: ரிங்கிட் மலேசியா 3000
மூன்றாம் பரிசு: ரிங்கிட் மலேசியா 1000
நான்காம் பரிசு: ரிங்கிட் மலேசியா 1000
உங்கள் திறனை வெளிப்படுத்த இக்களத்தைப் பயன்படுத்தி கொள்ளுங்கள்!
போட்டியின் அடிப்படை விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள், தனியுரிமை அறிவிப்பு ஆகியவற்றைப் படிக்கவும். இப்போட்டி விதிமுறைகளுக்கும் நிபந்தனைகளுக்கும் உட்பட்டது.
Suganti
Thu Jul 20 2023