உலகின் மூத்த மொழியான தமிழ் மொழியைப் பற்றி பலர் அறியாத விவரங்கள் இதோ...

1 .சமீபத்தில் தமிழ்நாட்டின் ஆதிச்சனல்லூரில் கண்டெடுக்கப்பட்ட தமிழ்-பிராமண கல்வெட்டுகள் 500 கி.மு.-க்கு முன் தோன்றியதாக நம்பப்படுகிறது. இப்பழங்காலத்து மொழி இன்னும் 60 மில்லியன் மக்களால் பேசப்படுவதால், இது பழமையான இன்னும் வாழும் மொழியாகும்.



2. 2004-ஆம் ஆண்டில் தமிழ் ஒரு பாரம்பரிய மொழியாக யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்டது.



3. தமிழ் பல அர்த்தங்களைக் கொண்டுள்ளது. மொழியின் பெயரைத் தவிர, தமிழ் அழகு, இனிப்பு மற்றும் இயற்கையைக் குறிக்கிறது.



4. உலகில் தெய்வமாக வணங்கப்படும் ஒரே மொழி தமிழ். காரைக்குடியில் உள்ள தமிழ்த்தாய் கோவிலில் இம்மொழி தாயாக வணங்கப்பட்டு வருகின்றது.



5. 'ழ' என்ற உச்சரிப்பைக் கொண்டிருக்கும் ஒரே மொழி தமிழ்.



6. தமிழ் சிங்கப்பூர் மற்றும் ஸ்ரீலங்காவில் அதிகாரப்பூர்வ மொழியாகும்; தென்னாப்பிரிக்கா, மலேசியா மற்றும் மொரிஷியஸ் ஆகிய நாடுகளில் சிறுபான்மை மக்களின் மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.




Sourced from: Scoopwhoop
Image credit: Designtraveller, Thenthisai, Aiislanguageproblems, Quora and Quartz , Tamil Miscet Singapore