துன் சாக்கி துன் அஸ்மிக்குப் பிறகு வாரியத்தில் சுயாதீன இயக்குநராகத் தற்போதுப் பணியாற்றும் துங்கு அலி ரிடௌடீன் இப்னி துவாங்கு முரிஸை ஜூன், 23 2022 முதல் ஆஸ்ட்ரோவின் புதியத் தலைவராக ஆஸ்ட்ரோ மலேசியா ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் (ஆஸ்ட்ரோ) வாரியம் இன்று அறிவித்தது.

2012-இல் புர்சா மலேசியாவில் ஆஸ்ட்ரோ பட்டியலிடப்பட்டதிலிருந்து அதன் தலைவராகப் பணியாற்றியத் துன் சாக்கி துன் அஸ்மி நாளை ஆஸ்ட்ரோவின் பத்தாவது ஆண்டுப் பொதுக் கூட்டத்தின் முடிவில் ஓய்வுப் பெறுகிறார். அவர் கூறுகையில்: “தொழில்துறையில் மிகவும் ஆக்கப்பூர்வமானப், புதுமையான மற்றும் ஆர்வமுள்ளச் சிலக் குழுக்களுடன் இணைந்துப் பணியாற்றும் பாக்கியம் ஆஸ்ட்ரோவின் தலைவராக எனக்கு கிடைத்தது. ஆஸ்ட்ரோவின் உருமாற்றப் பயணத்தில் இன்றைய முன்னேற்றம் குறித்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ஏனெனில், வாரியமும் நிர்வாகமும் பலச் சவால்களை எதிர்கொண்டு, வளர்ந்து வரும் ஊடகத் துறையின் வாய்ப்புகளைச் செவ்வெனப் பயன்படுத்திக் கொண்டன.

"FY22 ஆஸ்ட்ரோவிற்கு ஒரு உற்சாகமான ஆண்டாக இருந்தது. ஏனெனில், அல்ட்ரா மற்றும் அல்டிப் பெட்டி வழியாக 'அனைத்துப்-புதிய ஆஸ்ட்ரோ அனுபவம்', பிராட்பேண்டில் மட்டுமே இயங்கும் திறன் கொண்ட ‘பிளக் & ப்ளே’ பெட்டி, கைத்தொலைபேசியில் இயங்கும் முதல் ஸ்ட்ரீமிங் செயலியானச் 'சூகா' மற்றும் எங்களின் சொந்த அதிவேகப் பிராட்பேண்ட் சலுகையான, ஆஸ்ட்ரோ ஃபைபர் போன்றப் பலதரப்பட்டப் புதிய மற்றும் புதுமையானத் தயாரிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டன.”

“9 ஆண்டுகளுக்கும் மேலாக வாரியத்தில் பணியாற்றியப் பிறகு, தலைவர் பதவியை மற்றொருவருக்கு வழங்குவது இதுவேச் சரியானத் தருணம் என்று நான் கருதுகிறேன். அதேச் சமயம், துங்கு அலியின் புதிய நியமனத்தினைப் முன்னிட்டு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். வாரியம் மற்றும் ஆஸ்ட்ரோ குழுவின் தொடர்ச்சியான ஆதரவு மற்றும் அர்ப்பணிப்புடன், அவரதுத் தலைமைத்துவத்தின் கீழ் ஆஸ்ட்ரோ மென்மேலும் வலிமையாக வளர முடியும் என்று நான் நம்புகிறேன். ஆஸ்ட்ரோவுடனான ஈடுபாடு மற்றும் நிறைவானப் பயணத்திற்கு ஆதரவளித்த எனதுச் சக வாரிய உறுப்பினர்கள் மற்றும் அனைத்து ஆஸ்ட்ரோ ஊழியர்களுக்கும் நான் நன்றித் தெரிவிக்க விரும்புகிறேன். இறுதியாக, மதிப்பிற்குரிய வாடிக்கையாளர்கள், வணிகக் கூட்டாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் பங்குதாரர்களின் அளவற்ற ஆதரவு, நம்பிக்கை, அனுசரணை மற்றும் நட்புக்காக எனதுப் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.”

துங்கு அலி ரிடௌடீன் கூறுகையில்: “ஆஸ்ட்ரோ வாரியத்தின் புதியத் தலைவராக நான் நியமிக்கப்பட்டதைப் பெருமையாகக் கருதுகிறேன். புதுமையானத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வழங்கப்படும் சிறந்த உள்ளடக்கம் மற்றும் பொழுதுபோக்குக்கு ஏற்றப் பெயரைக் கொண்டிருக்கும் ஆஸ்ட்ரோ, ஒரு முன்னணி மலேசியப் பிராண்டாகும். எங்கள் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்டுத் தொழில்துறையில் எங்களின் நிலைப்பாட்டை நாங்கள் தொடர்ந்து உறுதிப்படுத்தி வருவதால், ஆஸ்ட்ரோவின் பயணத்தின் அடுத்தப் படியில் வாரியம் மற்றும் நிர்வாகத்துடன் இணைந்துப் பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன். துன் சாக்கி துன் அஸ்மி பல ஆண்டுகளாகக் குழுமத்திற்கு அளித்தப் பங்களிப்பிற்கும் தலைமைத்துவத்திற்கும் வாரியத்தின் சார்பாக நான் நன்றித் தெரிவிக்க விரும்புகிறேன்.”

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் (University of Cambridge) வரலாறு மற்றும் சமூகம் & அரசியல் அறிவியலில் துங்கு அலி இளங்கலைப் பட்டம் (Bachelor of Arts (Hons) in History and Social & Political Sciences) பெற்றுள்ளார். மேலும், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் (Harvard University) ஜான் எஃப் கென்னடி அரசாங்கப் பள்ளியிலிருந்துப் (John F Kennedy School of Government) பொது நிர்வாகத்தில் முதுகலைப் பட்டமும் (Masters in Public Administration) பெற்றுள்ளார். 2013-இல், அவர் உலகப் பொருளாதார மன்றத்தால் (World Economic Forum) இளம் உலகளாவியத் தலைவராகவும் (Young Global Leader), ஆசியாச் சமூகத்தினால் (Asia Society) ஆசியாவின் 21 இளம் தலைவராகவும் (Asia 21 Young Leader) அங்கீகரிக்கப்பட்டார்.

தற்போது, ​​அவர் பூமி அர்மடா பெர்ஹாட் (Bumi Armada Berhad) மற்றும் தலிவொர்க்ஸ் கார்ப்பரேஷன் பெர்ஹாட் (Taliworks Corporation Berhad) ஆகியவற்றின் தலைவராக உள்ளார். மேலும், பாங்காக் பேங்க் பெர்ஹாட் (Bangkok Bank Berhad) மற்றும் சன் லைஃப் மலேசியா அஷ்யூரன்ஸ் பெர்ஹாட் (Sun Life Malaysia Assurance Berhad) ஆகியவற்றின் வாரிய உறுப்பினராகவும் உள்ளார். டிபிஜி கேபிட்டலின் (TPG Capital) மூத்த ஆலோசகராகவும் பேத்தாலஜி ஏசியா ஹோல்டிங்ஸ் (Pathology Asia Holdings), சிவிஎஸ் கேஎல் (CVS KL), எக்ஸ்சிஎல் எஜுகேஷன் மலேசியா (XCL Education Malaysia) மற்றும் கொலம்பியா ஆசியா (Columbia Asia) ஆகியவற்றின் நிறுவன வாரியங்களின் உறுப்பினராகவும் உள்ளார்.

யயாசன் முனாரா (Yayasan Munarah), டீச் ஃபார் மலேசியா (Teach for Malaysia), மலேசியாவின் புற்றுநோய் ஆராய்ச்சி (Cancer Research Malaysia) மற்றும் WWF மலேசியா (WWF Malaysia) ஆகியவற்றின் தலைவராகவும், அமானா வாரிசன் நெகாராவின் (Amanah Warisan Negara) (மலேசியாவின் தேசியப் பாரம்பரிய அறக்கட்டளை) அறங்காவலராகவும் அவர் பணியாற்றுகிறார். அதே நேரத்தில், மலேசியா சைன்ஸ் இஸ்லாம் பல்கலைக்கழகத்தின் சார்பு-வேந்தராகவும், மலேசியாவின் மார்ல்பரோ கல்லூரியின் (Marlborough College Malaysia) ஆளுநர்கள் குழுவின் தலைவராகவும், மலேசியாவின் பிராந்திய இராணுவத்தில் (Territorial Army of Malaysia) பிரிகேடியர் ஜெனரல் (Brigadier General) மற்றும் ஒரு படைப்பிரிவின் தளபதியாகவும் (Commander of a Regiment) அவர் உள்ளார்.