நேயர்களே, நாங்கள் உங்களுடன் தொடர்ந்து 20 ஆண்டுகளுக்கு மேலாகப் பயணிக்கின்றோம். இப்பயணத்தில் ஒவ்வொரு ஆண்டும் உங்களுடன் இணைந்து தீபாவளியைக் கொண்டாடுவது எங்களைப் பெருமளவு உற்சாகப்படுத்துகிறது.

இவ்வருட தீபாவளி நன்னாளையொட்டி உங்களின் அபிமான நட்சத்திரங்களின் பிளாக்பஸ்டர் ஹிட் திரைப்படங்கள், புத்தம் புது திரைப்படங்கள், ரியாலிட்டி ஷோக்கள், நாடகங்கள், சிறப்பு நிகழ்ச்சிகள் என எண்ணற்ற நிகழ்ச்சிகளை ஆஸ்ட்ரோ வழங்க ஆயுத்தமாகவுள்ளது. இந்நிகழ்ச்சிகளின் சங்கமத்தை நண்பர்களுடனும் குடும்பத்தினருடனும் கண்டுகளித்து தீபாவளியைக் கொண்டாட மறவாதீர்கள்.


அமர்கள தீபாவளி 2022 (நேரலை) I 23 அக்டோபர், இரவு 10 மணிக்கு
சிங்கப்பூரிலிருந்து நேரலையாக ஆஸ்ட்ரோ மற்றும் வசந்தம் தொலைக்காட்சி பிரபலங்களுடன் ஆனந்தா தொகுத்து வழங்கும் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சி.


அழகுக் குட்டி செல்லம்| 24 அக்டோபர், பிற்பகல் 12.30, மணிக்கு
குழந்தைகள் பங்குப்பெற்று தங்களின் திறமைகளை ஆடை அலங்கார அணிவகுப்பு, விளையாட்டு மற்றும் நடனம் வழியாக வெளிப்படுத்தும் பொழுதுபோக்கு நிறைந்த கேளிக்கை நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியை அனைவருக்கும் மிகவும் பரிச்சையமான பிரபல இரட்டையர் டெனிஸ் குமாரும், கிருஷ்ணர் வேடத்தில் விகடகவி மகேனும் தொகுத்து வழங்குகின்றனர்.


நரை வந்த பிறகு | 24 அக்டோபர், மதியம் 1.30 மணிக்கு
பாலன் மற்றும் சந்திரன் ஆகிய இரு நண்பர்கள் தங்களின் விருப்பத்தின்படி சாலைப் பயணத்தை மேற்கொள்ள முற்படுகின்றனர்.


தல தீபாவளி விருந்து |24 அக்டோபர், இரவு 9 மணிக்கு
“தல” தீபாவளியைக் கொண்டாடும் புதுமண தம்பதியரான பாஷினி, கேசவன் கலந்து கொள்ளும் பலவகையான சைவ உணவுகளைத் தனித்துவமான முறையில் சமையல் நிகழ்ச்சி.

ஷங்கர் மகாதேவன் லைப் கொன்சேர்ட்| 24 அக்டோபர், இரவு 10 மணிக்கு
இசை ஜாம்பவான் ஷங்கர் மகாதேவனின் பிரமாண்ட இசை நிகழ்ச்சி.


குட்டி பட்டாஸ் | 25 அக்டோபர், மதியம் 1.30 மணிக்கு
நவின் தன் நோய்வாய்ப்பட்ட தாயாரால் நடத்தப்படும் ஆதரவற்றோர் இல்லத்தில் வளரும் குழந்தைகளைக் கவனித்துக் கொள்வதாக உறுதியளிக்கிறான். ஆனால், அக்குழந்தைகளில் ஒருவனான ஹர்வீஷ் காணாமல் போகும் நிலையில் பிற குழந்தைகளின் உதவியுடன் அவனைக் கண்டுப்பிடிக்க முற்படுகிறான். இவ்வேளையில் நவினின் தேடல் பணி சவாலுக்குறியதாக மாறுகிறது.

குட்டி பட்டாஸ் ரகளை | 25 அக்டோபர், மாலை 3 மணிக்கு
சுட்டி குழந்தைகளுடனும் குட்டி பட்டாஸின் நடிகர்களுடனும் கோலாகலமான தீபாவளி கொண்டாட்டம்.

மூன்றாம் அதிகாரம்| 25 அக்டோபர், பிற்பகல் 3.30 மணிக்கு
முகமூடியின் பின் மறைந்திருப்பது யார்? கொடூரமான குற்றத்தின் பின்னணி என்ன? என தீர்க்கப்படாத பல மர்மங்களின் முடிச்சுகளை அவிழ்க்கும் ‘க்ரைம் த்ரில்லர்’ நிறைந்த திரைப்படம்.


சிங்கப்பெண்ணின் தீபாவளி கலாட்டா | 25 அக்டோபர், மாலை 6 மணிக்கு
ஆஸ்ட்ரோவில் விரைவில் ஒளியேறவிருக்கும் ‘’சிங்கப்பெண்’’ தொடரின் நடிகர்கள் பங்குப்பெறும் சிறப்பு கேளிக்கை நிகழ்ச்சி.

பூச்சாண்டி | 26 அக்டோபர், இரவு 9 மணிக்கு

இந்தியாவிலிருந்து பத்திரிக்கையாளர் ஒருவர் மலேசியாவுக்கு அமானுஷ்யம் சார்ந்த கதைகளைக் கண்டறிய வரும் வேளையில், சில நண்பர்களின் இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்தியுடனான விளையாட்டு எப்படி விபரீதமாக மாறுகிறது என்பதே பூச்சாண்டியின் கதை.

அருள்மொழி | 27 அக்டோபர், இரவு 9 மணிக்கு

ஒரு தனியார் புலனாய்வாளரின் குடும்பத்தினரும் நண்பர்களும் ஆபத்து மிகுந்த போராட்டக் குழுவினால் கடத்தப்படுகின்றனர். மேலும் அக்குழு இரசாயன வெடிகுண்டு தாக்குதலையும் நடத்த திட்டமிடுகின்றனர். இந்நிலையில் புலனாய்வாளரால் அனைவரையும் காப்பாற்ற முடியுமா?

உங்கள் விருப்பம் | 24 அக்டோபர், 12.30 மணிக்கு
பொதுமக்கள் திரைப்படம் சார்ந்த கேள்விகளுக்குப் பதிலளித்து விருப்பமான பாடல்களைத் தங்களின் பிடித்தமானவர்களுக்குச் சமர்ப்பிக்கலாம்.

காமெடி டிவி | 24 அக்டோபர், மதியம் 1.30 மணிக்கு
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், திரைப்படங்கள், இசைக் காணொளிகளை நகைச்சுவையாக மறுகாட்சியமைக்கும் நிகழ்ச்சி.

JFW விருது 2022 | 24 அக்டோபர், மாலை 5.30 மணிக்கு
பல துறைகளில் முத்திரைப் பதித்த தென்னிந்தியப் பெண்களின் சாதனைகளைப் போற்றும் வகையில் விருது வழங்கும் விழா.


நான் பிரதீப் குமார் | 25 அக்டோபர், 12 மணிக்கு
பிரபல பாடகர் பிரதீப் குமாரின் முதல் இசை நிகழ்ச்சி. அவரின் புகழ்ப் பெற்ற பாடல்களை நேயர்கள் கண்டுகளிக்கலாம்.


பட்டாஸ் ஜோடி | 25 அக்டோபர், மாலை 5.30 மணிக்கு
ஒரு இளம் ஜோடி தங்களின் காதலை இருவீட்டு பெரியோர்களுக்கிடையிலான விரோதம் காரணமாக மறைக்க வேண்டியச் சூழ்நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இவர்களின் காதல் கைக்கூடுமா?


பரமபதம் | 25 அக்டோபர், இரவு 9 மணிக்கு
ஆஸ்ட்ரோ விண்மீன் தொடர்களின் கலைஞர்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட விளையாட்டு நிகழ்ச்சி. பல தண்டனைகளையும் சவால்களையும் கடந்து இவர்கள் வெற்றிப் பெறுவார்களா?

பிளாக்க்ஷீப்ஸ் யுவன் 25 | 26 அக்டோபர், மதியம் 12 மணிக்கு
இசைத் துறையில் தனது 25வது ஆண்டைப் பூர்த்தி செய்த சாதனையையொட்டி யுவன் ஷங்கர் ராஜாவின் செவிக்கு இனிமையான இசை நிகழ்ச்சி.


தாய்க்குடம் பிரிட்ஜ் | 29 அக்டோபர், இரவு 9 மணிக்கு
இந்தியாவின் நாட்டுப்புறம், பாரம்பரிய ஒலிகளின் கூறுகளைக் கொண்டு கட்டமைக்கப்பட்ட ஒலியமைப்பின் நேரடி இசை நிகழ்ச்சி.


ஜீ தமிழ் சாம்ராஜ்யம் | 23-24 அக்டோபர், 12 மணிக்கு | ஜீ தமிழ் எச்டி (அலைவரிசை 223)
ஜீ தமிழ் 15 ஆண்டு சாதனைப் பயணத்தில் அங்கம் வகிக்கும் எண்ணற்ற தொகுப்பாளர்களையும் கலைஞர்களையும் கவுரவிக்கும் பிரமாண்ட கொண்டாட்ட நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியில் அனைவரும் பல நினைவுகளை ஜீ தமிழுடன் பகிர்ந்து கொள்கின்றனர்.

மேலும், தகவல் தொடர்புக்கு, www.astroulagam.com.my/InaivomInaippom