நமது வாழ்வில் நம் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் ஆற்றல் வண்ணங்களுக்கு உள்ளது.

உதாரணமாக, நீங்கள் கோபமாக இருக்கும் தருணத்தில் சில வண்ணங்கள் உங்களைச் சாந்தமடையச் செய்யும். சில வண்ணங்கள் மகிழ்ச்சியைத் தரும்.

உங்கள் படுக்கையறையில் என்ன வண்ணம் பூசினால் எவ்வாறான தாக்கங்களை உண்டாக்கும் எனப் பார்க்கலாம்.

1. மஞ்சள்

சக்தி வாய்ந்த நிறமான மஞ்சள் ஆற்றலைக் குறிக்கும் வண்ணமாகும். இது பொறுமை மற்றும் ஞானத்தையும் தரவல்லது. இந்த வண்ணத்தைப் படிக்கும் அறை மற்றும் குழந்தைகள் அறைக்குப் பயன்படுத்துவதும் சிறப்பு.

2. பழுப்பு

இந்த நிறம் தனிப்பட்ட வாழ்விற்கு சிறந்த நிறமாகும். காரணம், இந்நிறம் நல்லிணக்கத்தையும் காதலையும் உண்டாக்குகின்றது. அதுமட்டுமின்றி, உங்கள் உறக்கத்தையும் மேம்படுத்தும்.

3. நீலம்

நேர்மறை எண்ணங்களை அதிகரிக்க உதவும் நீல நிறம், அமைதி, மேன்மை மற்றும் உயர்வையும் தரவல்லது.

4. பச்சை

பச்சை நிறம் நம்பிக்கையைக் குறிக்கின்றது. இது இல்லற வாழ்க்கையில் ஈர்ப்பையும் நெருக்கத்தையும் அதிகரிக்கின்றது.

5. நரந்தம் (ஆரஞ்சு)

படுக்கையறைக்கு நரந்தம் ஒரு சிறந்த வர்ணமாகும். அழகு, சக்தி, சௌகரியம் மற்றும் உறுதிப்பாட்டைக் குறிக்கும் இவ்வண்ணம், உங்கள் மத்தியில் மகிழ்ச்சி மற்றும் காதலை அதிகரிக்கின்றது.

6. சேயம் (பிங்க்)

காதலின் நிறமாகக் கருதப்படும் பிங்க் அமைதி மற்றும் சந்தோஷத்தைக் குறிக்கின்றது.

7. சிவப்பு

கோபத்தின் வெளிப்பாட்டைப் பிரதிபலிக்கும் நிறம் சிவப்பு.ஆதலால், படுக்கையறைக்கு இந்நிறத்தை பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

8. வெள்ளை

அமைதியின் வடிவான வெள்ளை நிறம் தெளிவு மற்றும் கவனத்தை அதிகரிக்கவல்லது. தூக்கத்தை மேம்படுத்தக்கூடிய வெள்ளை நிறம், படுக்கையறைக்கு உகந்த நிறமே!

Sourced from: Lankasri
Images credit: Pinterest