கோலாலம்பூர், மார்ச் 3, 2022 – முதல் ஒளிபரப்புக் காணும் பிக் ஸ்டேஜ் தமிழ் எனும் ரியாலிட்டிப் பாடல் போட்டியின் மூலம் உயர்தர உள்ளூர் தமிழ் உள்ளடக்கத்தை ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள் கண்டு மகிழலாம். #TheTurningPoint என்றக் கருப்பொருளுடன் மலரும் இந்நிகழ்ச்சிப், புதிய உள்ளூர் திறமையாளர்களை வளர்க்கவும் மேலும் பல இளம் பாடகர்கள் தங்கள் கனவுகளை இத்தளத்தின் மூலம் அடைய ஊக்கமளிக்கவும் விரும்புகிறது. மார்ச் 12, இரவு 9 மணிக்கு, ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202) வாயிலாக டிவி, ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்ட் ஆகியவற்றில் பிக் ஸ்டேஜ் தமிழ் முதல் ஒளிபரப்புக் காணுகிறது.
ஆஸ்ட்ரோவின் இந்திய வாடிக்கையாளர் வணிகப் பிரிவுத் துணைத் தலைவர், பிரேம் ஆனந்த் கூறுகையில், “எங்கள் உள்ளூர் தயாரிப்புகளின் தரத்தைத் தொடர்ந்து உயர்த்தி, வாடிக்கையாளர்களுக்கு எங்கள் உள்ளடக்கத்தை விரிவுப்படுத்துவதைத் தொடர்ந்து, எங்கள் அசல் தமிழ் நிகழ்ச்சியானப் பிக் ஸ்டேஜ் தமிழ்-ஐ அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். அசல் பிக் ஸ்டேஜ்-இன் வெற்றியைக் கருத்தில் கொள்வதால், எங்கள் இரசிகர்கள் மற்றும் இளம் திறமையாளர்களின் உயர்தர உள்ளூர் பாடல் போட்டிக்கானக் கோரிக்கைகளை இத்தழுவல் பூர்த்திச் செய்யும் என்று நாங்கள் நம்புகிறோம். அனைத்துப் போட்டியாளர்களையும் நாங்கள் வாழ்த்துகிறோம். மேலும், எங்கள் வாடிக்கையாளர்கள் இந்தப் புதிய நிகழ்ச்சியை இரசிப்பார்கள் என்று நம்புகிறோம்.”
பிரபல உள்ளூர் திறமையாளர்களான அஹிலா (ராகா) மற்றும் விக்கி ஆகியோர் பிக் ஸ்டேஜ் தமிழ்-ஐ தொகுத்து வழங்குகின்றனர். மேலும், பதினொரு போட்டியாளர்களிடையேக் கடுமையானப் போட்டியுடன் இரசிகர்களைக் கவரும் வகையில் இந்நிகழ்ச்சி அமைந்துள்ளது:
பவித்ரன் சுப்ரமணியம், கன்னியாஸ்ரீ கண்ணன், ஹரிஹரன் சி கங்கத்ரன், சசிதரன் ராஜேந்திரன், வேத நவீனா பரமேஸ்வரன், அருளினி ஆறுமுகம், தனுஷன் ஜெயக்குமார், ரோஷினி பாலச்சந்திரன், ஜீவன்ராஜ் வேணுகோபால், வேத ஷஹானா பரமேஸ்வரன் நாயுடு, மற்றும் ஸ்வேதா நாயர் கிருஷ்ணகுமார்.
(போட்டியாளர்களின் சுயவிவரங்களுக்கு இங்கே அணுகவும்)
பாடகர்கள், டாக்டர் பர்ன் மற்றும் புனிதா ராஜா, முன்னாள் ராகாவின் அறிவிப்பாளர் மற்றும் கலைஞர், ராம் மற்றும் இசையமைப்பாளர், ஷமேஷன் மணி மாறன் உட்பட உள்ளூர் இசைத் துறையைச் சேர்ந்த நடுவர்கள் குழுவால் போட்டியின் 8 வாரப் பயணத்தில் போட்டியாளர்கள் வழிநடத்தப்படுவர். நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும், பிரபலங்கள் வாராந்திரச் சிறப்பு நடுவர்களாகத் தோற்றமளிப்பதையும் வாடிக்கையாளர்கள் கண்டு மகிழலாம். பல வருட அனுபவம் மற்றும் நிபுணத்துவம் கொண்ட இந்நடுவர்கள், அதிகச் செயல்திறன் தரத்தை அடையப் போட்டியின் போதுப் போட்டியாளர்களைக் கடினமாக உழைக்கத் தூண்டுவதோடுப் போட்டியாளர்கள் தங்களைச் சவால் செய்யவும் வித்திடுவர். முதல் நிலை வெற்றியாளர் ரிம 30,000 ரொக்கப் பரிசையும், இரண்டாம் நிலை வெற்றியாளர் ரிம 15,000 ரொக்கப் பரிசையும் மற்றும் ஆறுதல் பரிசு வெற்றியாளர்கள் ஒவ்வொருவரும் தலா ரிம 5,000 ரொக்கப் பரிசுகளையும் தட்டிச் செல்வர்.
பிக் ஸ்டேஜ் தமிழ்-இன் புதிய அத்தியாயங்களை ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 9 மணிக்கு, டிவி மற்றும் ஆஸ்ட்ரோ கோ ஆகியவற்றில் கண்டுக் களிக்கலாம் அல்லது எப்போது வேண்டுமானாலும் ஆன் டிமாண்டில் ஸ்ட்ரீம் செய்து மகிழலாம். பிக் ஸ்டேஜ் தமிழ்-ஐப் பற்றிய மேல் விபரங்களுக்கு http://www.astroulagam.com.my/BigStageTamil எனும் அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.
SIDAMBARAM, Kirthiga
Fri Mar 04 2022


Dhee Full Interview I Saravedi Talk

Manmadha Bullets Reloaded I Full Episode 2

Exclusive Interview with Krish I Saravedi Night

Manmantha Bullets Reloaded I Full Episode I EP 1

Bhagyalakshmi @ Suchitra I Full Interview I Saravedi Talk

Dato' Sri Siti Nurhaliza I Exclusive Interview | Astro Ulagam

Interview with Sri Nisha

Interview With Hari Priya

Kanna Murukku Thinna Aasaiya | Episode 5
What fate awaits Mama and the love-sick Jeeva? It’s time to find out!

Kanna Murukku Thinna Aasaiya | Episode 4
Grab your murukku because Mama is about to make a shocking discovery.