உழைப்பின் பயனை அடைவதற்கு தமிழன் கொண்டாடும் ஒரே நாள் இந்த பொங்கல் திருநாள்.

இயற்கையோடு இயைந்து வாழ்வதே மனித வாழ்க்கையின் நியதி. அந்த இயற்கைக்கு நன்றி செலுத்தும் திருநாளாக அமைகின்றது இந்த பொங்கல் திருநாள். நம்முடைய வாழ்க்கை முறையானது சூரியனை சார்ந்து அமைந்திருப்பதால் சூரியனுக்கு நன்றி செலுத்தும் வகையில், முதல் நாள் பொங்கலிட்டு சூரியனுக்கு படைத்து இருகரம் கூப்பி நன்றி சொல்கிறோம்.

இந்தப் பொங்கல் திருநாளை உலகத் தமிழர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து கொண்டாடுகிறோம். சிலர் இந்த நாளை இயற்கைக்கு நன்றி செலுத்தும் ஒரு நாளாக கொண்டாடும் வேளையில், சிலர் இந்தத் திருநாளை தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடுகின்றனர். ஒரே நாளை வெவ்வேறு நோக்கத்துடன் கொண்டாடுவதற்கான காரணம் என்னவாக இருக்கும் என்பது பலரின் கேள்வி.

சூரியனின் உயதமே ஒரு நாளின் தொடக்கமாக தமிழன் வரையறுத்து வைத்துள்ளான். ஒரு வாரத்தின் தொடக்கமும் ஞாயிறு அன்றே தொடங்குகிறது. 15 நாள் வளர்ப்பிறை, 15 நாள் தேய்ப்பிறை என்ற ஒரு மாதத்தின் தொடக்கமும் சூரியனால்தான் முடிவு செய்யபப்டுகிறது.

பூமி சூரியனை சுற்றி வரும் ஒரு சுற்றுப்பாதை முடிந்து அடுத்த சுற்றுப்பாதையை ஆரம்பிக்கும் நாள் புதிய வருடத்தின் முதல் நாள். இதுவும் சூரியனை வைத்துதான் முடிவு செய்யப்படுகிறது. இதனால்தான் பொங்கல் தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்படுவதாக கருத்து நிலவுகிறது.

அதேவேளையில் சங்க காலம் முன்பே பொங்கல் விழா என்பது இயற்கைக்கு நன்றி சொல்லும் ஒரு திருநாளாகவே தொன்று தொட்டு வருகிறது. இது மரபு வழி கடைபிடித்துவரும் ஒரு விழா. ஆக இது இயற்கைக்கு நன்றி செலுத்தும் ஒரு விழா மட்டுமே என்ற கருத்தும் உண்டு.

Picture credit: Sifi Bawarchi