மா‌சி மாத‌த்‌தி‌ல் தே‌ய்ப் ‌பிறையில் வரு‌ம் ‌சது‌ர்‌த்த‌சி நாளையே நா‌ம் மகா ‌சிவரா‌த்‌தி‌ரி என்கிறோம். ‌

சிவரா‌த்‌தி‌ரி எ‌ன்பது இருவகை‌ப்படு‌ம். அதாவது ஒ‌வ்வொரு மாதமு‌ம் தே‌ய்ப் ‌பிறை‌யி‌ல் வரு‌ம் ‌சது‌ர்‌த்த‌சி நா‌ள் ‌சிவரா‌த்‌தி‌ரி எ‌ன்றும், அதுவே மா‌சி மாத‌த்‌தி‌ல் வரு‌ம் சது‌ர்‌த்த‌சி நா‌ள் மகா ‌சிவரா‌த்‌தி‌ரி எ‌ன்றும் அணுசரிக்கப்படுகிறது.

அ‌‌ன்றைய ‌தின‌ம் ‌விரத‌மிரு‌ந்து ‌சிவன் ஆலயத்திற்குச் செ‌ன்று ஈசனை வழிப்பட்டால் அவரின் முழு ஆசியைப் பெறலாம் என்று பெரியவர்கள் சொல்ல நாம் கேள்வி பட்டிருப்போம்.

ஏன் சிவராத்திரி அணுசரிக்கப்படுகின்றது என்று தெரிந்து கொள்வது அவசியம். ஏதோ பெரியவர்கள் சொன்னார்கள் அதனால் செய்து வருகிறோம் என்ற போக்கு கூடாது. எதையும் உணர்ந்து கொண்டாடுதல் அவசியம்.

பிரளய காலம், பிரம்மனும், அவரால் சிருஷ்டிக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளும் அழிந்து விட்டனர். உயிர்கள் எல்லாம் சிவனிடத்தே ஒடுங்கின.
இந்த நிலையை சீர் செய்ய அம்பிகை சிவப்பெருமானை இடைவிடாது தியானம் செய்தார். அவரின் தியானத்தை ஏற்று தன்னுள் ஒடுங்கி இருந்த அனைத்து உயிர்களையும் படைத்தருளினார்.

அப்பொழுது உமையவள் தான் ஈசனை மனதில் தியானித்துப் போற்றிய காலம் “சிவராத்திரி” என்று பெயர் பெற வேண்டும் என்றும், அதனைச் சிவராத்திரி விரதம் என்று அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அதை கடைப்பிடிப்பவர்கள் எல்லா நலன்களும் பெற்று முக்தியடையவேண்டும் என்று சிவப்பெருமானைக் கேட்டுக் கொள்ள அவரும் அவ்வாரே அருள் புரிந்தார்.

இவ்வாறு மகா ‌சிவரா‌த்‌தி‌ரியை‌ப் பற்றிய ஒரு புராண‌க் கதை கூறுகிறது.

Photo Credit: Pkastrocenter and Youmeandtrends