முடி உதிர்தல் பலருக்கு மனவேதனையைத் தரக்கூடியதாக உள்ளது.

உடலில் சத்து குறைவு, சுத்தமில்லாத தண்ணீர், நீரில் அளவுக்கு அதிகமான குளோரின், முதிர்ச்சி, மன அழுத்தம், புகைப்பிடித்தல், தோல் வியாதி போன்ற காரணத்தினால் முடி அதிகம் உதிர்கின்றது.

சுமார் ஒரு லட்சம் முடிகள் நம் தலையில் உள்ளது. ஒரு நாளைக்கு 50 முதல் 100 முடிகள் உதிர்வது சதாரணம். இதை விட அதிகமாக உதிரும்போது இந்தப் பிரச்சனையைக் கண்டிப்பாக களைய வேண்டும்.

அடர்ந்த சிகைதான் அழகான தோற்றத்திற்கு முக்கிய பங்கு வகிக்கின்றது. அவ்வகையில் இந்த முடி உதிர்தல் பிரச்சனையை சில வழிமுறைகளை கையாண்டு போக்கலாம்.

முடி மசாஜ்

தேங்காய் எண்ணை, ஆலிவ் எண்ணை,விளக்கெண்ணை, அம்லா எண்ணை போன்ற எண்ணைகளை பயன்படுத்தி தலை முடியை மசாஜ் செய்வதால் இரத்த ஓட்டம் சீராகுகிறது. இதனால் முடியின் வேர்களுக்கு தேவைப்படும் சத்து கிடைக்கிறது, இந்த வழிமுறையை 2 வாரத்திற்கு ஒரு தடவை செய்ய வேண்டும்.

அம்லா
அம்லா வைட்டமின் C நிறைந்தது. முடி உதிர்வதற்கு இன்னொரு காரணம் வைட்டமின் C குறைவே ஆகும். இந்த அம்லா சாறு தோல் வியாதி, அரிப்பு போன்ற பிரச்சனைகளை நிவர்த்தி செய்வதோடு, தோலுக்கு தேவையான ஆக்ஸிஜன், தேவையற்றை கழிவையும் நீக்குகின்றது.

ஒரு தேக்கரண்டி அம்லா சாறுடன், ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாற்றை கலந்து முடியின் வேர்களில் நன்றாகத் தடவ வேண்டும். பின் 1 மணிநேரம் சென்று தலை குளிக்க வேண்டும்.

வெந்தயம்
புரதச்சத்து மற்று நிகோடிக் நிறந்தது இந்த வெந்தயம். இது வேர்களை உறுதியாக்குவது மட்டுமில்லாமல் முடி வளர்வதை அதிகரிக்கிறது.

முதல் நாள் இரவு வெந்தயத்தை தண்ணீரில் ஊரவைக்கவும். மறுநாள் காலையில் இந்த வெந்தயத்தை அரைக்கவும். பின் இந்தக் கலவையை தலையில் போட்டு 40 நிமிடத்திற்கு ஊறவைத்து தலை குளிக்க வேண்டும். இவ்வாறு தினமும் ஒரு மாதத்திற்கு செய்ய வேண்டும்.

வெங்காயச் சாறு
வெங்காயத்தில் அதிகமான கந்தக சத்து இருப்பதால் இது முடி வளர்ச்சிக்கு முகவும் உதவும். மேலும் தலையில் உள்ள டொலில் இருக்கும் பக்டீரியா, தோல் அரிப்பு போன்றவற்றை நிவர்த்தி செய்யும்.

இந்த வெங்கயச் சாற்றை முடியின் வேர்களில் படும்படி தேய்க்க வேண்டும். பின் 40 நிமிடத்திற்கு ஊறவைத்து தலை குளிக்க வேண்டும். ஒரு வாரத்திற்கு 3 முறை இப்படி செய்வதன் மூலம் முடி வளர்ச்சி மற்றும் சொட்டை பிரச்சனையைத் தவிர்க்கலாம்.

கற்றாழை
இந்தக் கற்றாழைச் சாறு காலங்காலமாக முடி வளர்ச்சிக்கு உதவியாக உள்ளது. இந்த கற்றாழை இலைய வெட்டி நடுவில் இருக்கும் ஜெல்லை மட்டும் எடுத்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். பின் இந்தக் கலவையை 1 மணிநேரத்திற்கு முடியில் ஊறவைத்து கழுவவும் . இவ்வாறு வாரத்திற்கு 3 அல்லது 4 முறை செய்யவும்.

புகைப்பட மூலம்: StyleCrazel,Business Insider,www.pinterest.com