முருகு என்ற சொல்லுக்கு அழகு என்ற பொருளுண்டு. முருகன்தான் தமிழ் மொழியை முதன் முதலில் அறிமுகப்படுத்தினார் என்றும், சிவ பிரானுக்கு பிரணவ மந்திரத்தை உபதேசித்தது முருகன் தான் என்ற கூற்று உண்டு.
சங்க காலத்திலேயே குறிஞ்சி நில மக்கள் முருகனை குறிஞ்சிக் கடவுளாக வழிபட்டனர். அதனால்தான் குன்றுதோறும் குமரனைக் காணலாம். முருகனின் வழிபடுவது உலகத்திலுள்ள பெரும்பாலான மக்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
முருக வழிபாடு தமிழ் மக்களிடையே தொன்று தொட்டு வரும் ஒரு வழிபாடாகவே உள்ளது. மேலும் அன்று முதல் இன்று வரை முருகனுக்குக் காவடி ஏந்தும் பழக்கம் சிறிதளவும் பக்தர்களை விட்டு நீங்கவில்லை.
முருகு என்ற சொல் இளமை என்றும் பொருள்படும். மெல்லின, இடையின, வல்லின மெய் எழுத்துக்களிடம் உ என்ற உயிர் எழுத்து முருகு என்று உருவாகுகின்றது. இது இச்சா, கிரியா மற்றும் ஞான சக்தியைக் குறிக்கின்றது.
மேலும் தேவர் மூவரின் பெயர்களின் முதலெழுத்துக்கள் சேர்ந்ததே ‘முருக’ என்ற திருநாமம்: (மு)குந்தன் – திருமால்; (ரு)த்ரன் – சிவன்; (க)மலோத்பவன் – பிரம்மன். ஆற்றல், காத்தல், அழித்தல் என மூன்று செயல்களின் வெளிப்பாடாகவும் முருகன் திகழ்கிறார்.
முருகனின் பன்னிரண்டு கண்களைப் போல் தமிழில் உயிரெழுத்துக்கள் 12. முருகனின் கையில் இருக்கும் ஒரு வேலாயுதம் போல் தமிழில் இருப்பது ஃ என்ற ஆயுத எழுத்து. பிற மொழிகளில் இல்லாத சிறப்பு எழுத்து இதுவே!
neo
Tue Jan 26 2021