இன்றைய சூழலில் நமது சருமத்தை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள கண்டிப்பாக சிரத்தை எடுத்துதான் ஆக வேண்டும். சிலருக்கு சருமம் வறண்டு மிகவும் வயதான தோற்றத்தைக் கொடுக்கும். மேலும் உங்கள் சருமம் வறண்டு இருந்தால் தோல் தொடர்பான நோய்களில் பாதிக்கப்பட்டு அவதியுருவர்.

சுடுநீரை தவிர்க்கவும்

குளிர்காலங்களில் சுடுநீரில் குளிப்பதைத் தவிருங்கள். இது உங்களில் தோலில் இருக்கும் மென்மையான தன்மையை போக்கிவிடும். இதனால் சருமம் வறண்டு நீரில்லாமல் சுருங்கி காணப்படும்.

சீனி மற்றும் உப்பு தொடர்பான சருமப் பொருட்கள்

உங்கள் சருமத்தை சீனி மற்றும் உப்பு போன்ற பொருட்களைக் கொண்ட ஸ்கரப்பால் நன்றாக அழுத்தி தேய்க்கவும். இது உங்கள் சருமத்தில் அண்டியுள்ள இறந்த அணுக்களை உடனடியாக நீக்கி சருமத்தை பளபளப்பாகக் காட்டும்.

லோஷன்கள்

நீங்கள் குளித்தவுடனே உங்க்ள் சருமத்தில் லோஷன்களை தடவி விடுங்கள். குளியறையில் இருக்கும் போதே இந்த லோஷன்களை தடவுவதால் இதன் பலன் சீக்கிரமாகக் கிட்டும். மேலும் உங்கள் சருமம் சற்று ஈரமாக இருக்கும் போதே தடவி விடுவது நல்லது.

பாலைப் பயன்படுத்துங்கள்

வறண்ட சருமத்திற்கு சிறந்த நிவாரணி பால்தான். உங்கள் குளிர்சாதனப் பெட்டியில் பால் இருந்த்தாலே போதும். அதை ஒரு பாத்திரத்தில் ஊற்றி துணியில் நனைத்து சருமத்தில் மெதுவாக தேய்க்கவும். இதில் இருக்கும் லேக்திட் அசிட் உங்கள் சருமத்தில் இருக்கும் நமைச்சலை உடனே போக்கும்.

புகைப்பட மூலம்: www.black-women-beauty-central.com