முருகன் இரண்டு கல்யாணம் செய்தவன் என்பார்கள்.

சூரபத்மனை வதம் செய்த முருகனுக்கு தன் மகளைத் திருமணம் செய்து வைக்கிறார் தேவலோக அதிபதி இந்திரன். இந்த திருக்கல்யாணம் திருப்பரன்குன்றத்தில் நிகழ்ந்தது. உண்மையான பக்தி தன்னை தேடி வரும் என்பது கிரியா சக்தி. இதற்கு உதாரணம்தான் தெய்வயானை.

அதேவேளையில் வேடுவர் குல மகளாக வள்ளி மணந்தால் முருகனைத் தான் மணப்பேன் என்ற குறிக்கோளோடு இருக்கிறாள். அவளின் அன்பை மெச்சி முருகனே அவளைக் காணச் சென்று அவளை மணக்கிறார். உண்மையான பக்திக்கு தானே முன்வந்து அருள்பாளிப்பதுதான் இச்சா சக்தி.

வள்ளி தெய்வயானையின் அர்த்தத்தை சிலர் முழுசாக புரிந்துக் கொள்வதில்லை என்கிறார் சுல்தான் இட்ரிஸ் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் திரு கார்த்திகேஸ் பொன்னையா.





Picture Credit: Cinema Chaat புகைப்பட மூலம்: