வாழை அடி முதன் நுனி வரை மருத்துவ குணம் நிறந்த ஒரு மரமாகும். வாழைப்பூ, வாழைத்தண்டு, வாழைப்பழம் போன்றவை சமையலுக்கும், வாழை இலை உணவு பறிமாறவும் பயன்படுத்தப்படுகிறது.
ஏன் வாழை இலையில் உணவு பரிமாறப்படுகிறது என்றால் அதுவும் மருத்துவ குணம் கொண்டதே. வாழை இலையில் பரிமாறப்படும் உணவு இலையில் இருக்கும் சத்தை உணவில் உள்வாங்கி நமக்கு பலன் தருகிறது.
வாழைப்பூவை உணவில் சேர்த்துக் கொள்வதால் உடலில் இருக்கும் கொழுப்புகளைக் கறைத்து வெளியேற்றுகிறது. மேலும் இரத்த நாணங்களில் இருக்கும் கொழுப்பை கறைப்பதால் உடலுக்கு தேவையான உயிர்வளியை இரத்தக் குழாய்களின் வழியே சரிவர பிற உறுப்புகளுக்கு கொண்டு செல்ல முடிகிறது.
அவ்வகையில் வாழைப்பூ வடை செய்து குழந்தைகளுக்குப் பரிமாறினால் விருப்பமாக உண்பர்.
தேவையானப் பொருட்கள்
செய்முறை
வாழைப்பூவை சுத்தம் செய்து சிறியதாக நறுக்கி கொள்ளவும்.
கடலைப் பருப்பு மற்றும் துவரம் பருப்பை ஊறவைக்கவும்.
பிறகு இருவகை பருப்பு, வாழைப்பூ, மிளகாய், சீரகம், சோம்பு, உப்பு ஆகியவற்றை ஒன்றாக போட்டு அறைக்கவும்.
பின் இந்தக் கலவையில், நறுக்கிய வெங்காயம், துருவிய தேங்காப்பூ, கருவேப்பிலை போட்டு பிசையவும்.
பின் வாழை இலையை சிறியதாக வெட்டி இந்தக் கலவையை உருண்டையாக உருட்டி அதன் மேல் தட்டவும்.
தட்டையாக வந்த கலவையை சூடேறிய எண்ணையில் போட்டு பொறிக்கவும்,
வாழைப்பூ வடை தயார்.
புகைப்பட மூலம்: anudinam.org