இஞ்சி நம் உடலுக்கு அதிக நன்மை அளிக்கும் உணவுகளில் ஒன்றாகும். இதைக் கீழே குறிப்பிடப்பட்டுள்ளபடி பானமாகச் செய்து குடித்தால் ஜீரண செயல்களை ஒழுங்குபடுத்துதல், குடல்களில் படியும் கொழுப்பினை கரைத்தல், வயிற்றினை சுத்தப்படுத்துதல் மற்றும் எடைக் குறைக்க உதவுதல் போன்ற பல நன்மைகள் கிட்டும்.

இந்த இஞ்சி பானத்தின் செய்முறை இதோ...

1. இஞ்சியைச் சிறிதளவு எடுத்து தட்டிக் கொள்ளுங்கள்.

2. ஒரு பாத்திரத்தில் நீரினை லேசாக சூடுபடுத்தவும் (கொதிக்க விட வேண்டாம்).

3. அதில் தட்டிய இஞ்சி, எலுமிச்சை சாறு சில துளிகள் மற்றும் தேனைக் கலக்க வேண்டும்.

4. இந்தப் பானத்தை இளஞ்சூட்டிலேயே குடியுங்கள்.

Sourced from: Poptamil
Image credit: Pinterest