சிகப்பு நிற முத்துகளை வரிசையாக அடுக்கி வைத்தார் போல் காட்சியளிக்கும் மாதுளை பழம் எல்லா வகையிலும் பயனளிக்கும் மருத்துவ குணங்களை கொண்டுள்ளது

அன்றாடம் மாதுளை பழம் ஜூஸ் அருந்துவதால் உடலில் இருக்கும் தேவையில்லாக் கொழுப்பு குறைகிறது. மேலும் இது இதயத்தை வலுப்படுத்துவதிலும் இதயம் தொடர்பான நோய்களை குறைக்க மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

உங்களை என்றுமே இளமையாக வைத்துக் கொள்ளும் தன்மையும் இந்த மாதுளம் பழத்திற்கு உண்டு.

இதனால்தான் தற்பொழுது சந்தையில் மாதுளம் பழச்சாறு புட்டிகளில் அடைக்கப்பட்டு விற்கப்படுகிறது. ஆனால் நீங்கள் சுயமாகவே இந்த பழச்சாறை தயார் செய்யலாம்.

ஆண்டி ஆக்சிடண்ட் கொண்ட மாதுளம் பழம் பல்வேறுவகையான புற்று நோய்களை தீர்க்க வல்லது.

பளபளப்பான தோலுக்கு மாதுளம் பழம் உதவி செய்வதால் தோல் தோல் தொடர்பான நோய்க்ளையும் குறைக்கலாம்.

நார்சத்து அதிகம் உள்ள இந்தப் பழம் மலச்சிக்களையும் தடுக்க வல்லது.

மாதுளம் பழச்சாறு தயாரிக்கும் முறை


மாதுளம் பழம் - 1

தேன் - 2 டீஸ்பூன்

பால் - கப்

செய்யும் முறை

மாதுளம் பழ முத்துகளை எடுத்து நன்றாக அரைத்து வடிகட்டவும். பின் இதனுடன் தேன் மற்றும் பாலை சேர்க்கவும். சுவையான மாதுளம் பழச்சாறு தயார்.

இந்த பழச்சாறை பருகி வர பித்தம் நீங்கும்.

புகைப்பட மூலம்: www.medicaldaily.com