இந்த கேரட் மோர் பானம் கொழுப்பற்றது மற்றும் ஊட்டச் சத்து நிறைந்தது. ஆன்டி ஆக்ஸிடென்ட் அதிகமாக உள்ள இப்பானம் சுறுசுறுப்பினை அதிகரித்து, பசியைத் தாங்கும் சக்தியை அதிகரிக்கும். இப்பானத்தின் செய்முறை இதோ...

தேவையான பொருட்கள்:

மோர்: 1 கப்

புதினா இலை: கைப்பிடி அளவு

கொத்தமல்லி தழை: சிறிதளவு

கேரட் துண்டுகள்: 3

வறுத்த சீரகம்: சிறிதளவு

உப்பு: தேவையான அளவு

செய்முறை:

1. கொத்தமல்லி, புதினா மற்றும் கேரட்டை நன்கு அரைக்க வேண்டும்.

2. பின் அதில் மோரைச் சேர்த்து, சீரகத்தைத் தூவி குடிக்க வேண்டும்.

Sourced from: Poptamil
Image credit: Shutterstock