இடது கண் துடித்தால் நாம் வெளியூர் பயணம் செல்வோம் என்றும் வலது கண் துடித்தால் வீட்டிற்கு விருந்தினர்கள் வருகின்றனர் என்றும் சொல்வார்கள். கண்கள் துடித்தாலே ஏன் என்ன காரணம் என பெரியோர்களை கேள்வி மேல் கேள்வி கேட்பது வழக்கம்தான்.

கண்கள் துடிப்பதற்கு காரணம் நம் உடல்நிலையே. நம் உடலை சுற்றியும் உடல் முழுவதிலும் மின்னோட்டமும் நுண்னிய மின்னணுக்களும் உள்ளன. இந்த ஓட்டத்தில் ஏற்படும் மாற்றங்கள்தான் இந்த கண்கள் துடிப்பதற்கு காரணமாக அமைகின்றன.

இந்த கண் துடிப்பு சிலருக்கு சில விநாடிகளும் ஒரு சிலருக்கு 5 நிமிடங்களுக்கு ஒரு முறையும் நடக்கும். நம் உடலில் உள்ள மின்னணுக்களுக்களில் எற்படும் மாற்றங்கள்தான் இதற்கு காரணம். இதற்காக பயப்பட வேண்டியதில்லை.

இந்த மின்னணுக்களின் ஓட்டத்தில் எற்படும் மாற்றங்களுக்கு சில காரணங்கள் உண்டு. தூக்கமின்மை, மன அழுத்தம், அதிக நேரம் கணிணியைப் பார்த்தல் போன்றவையாகும்.

முடிந்தவரை கண்களை ஈரப்பதத்துடன் வைத்திருத்தல் முக்கியம், கண்களுக்கு நல்ல ஓய்வு கொடுக்க வேண்டும். முடிந்தவரை கண்களின் மேல் நறுக்கிய வெள்ளரிக்காயை வைத்து சில நிமிடங்கள் ஈரப்பதமும் குளிர்ச்சியையும் கண்களுக்கு கொடுங்கள்.

கண்கள் துடிப்பதற்கு என சிகிச்சை இல்லை. ஆனால் உங்களின் அன்றாட வேலைக்கு இடையூறாக இருக்கும் வண்ணம் கண்கள் துடித்துக் கொண்டிருந்தால் மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது அவசியம்.

புகைப்பட மூலம்: www.viralnovelty.net