முருகன், ஆறுமுகம் கொண்டவன் என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் இந்த ஆறுமுகம் கொண்டவனின் பல்வேறு தோற்றங்களின் அர்த்தம் உங்களுக்குத் தெரியுமா?

முருகன் சிவபெருமானுக்கு குருவானவர், பிரணவ மந்திரத்தை உபதேசித்தார். பிரம்மா தன்னை அவமதிக்க அவருக்குப் பாடம் புகட்ட இந்தச் சூழ்நிலை உருவாகியது. தற்பெருமை, கர்வம் போன்ற செயல்கள் ஞானத்தை அழிக்கும் என்பதை உணர்த்தவே இந்தச் சம்பவம்.

பழனியில் தண்டபாணி கோலத்தில் தோற்றமளிக்கும் முருகன் ஞானப்பழம் கிடைக்காத கோபத்தில் இருக்கும் தோற்றமாக இருக்கும். இந்தத் தோற்றத்தின் பொருள் ஆணவமும், செருக்கும் அழிவைத் தரும் என்பதே. மேலும் அடக்கமும் முன்யோசனையும் வெற்றியைத் தரும் பொருள்படும்.

அவ்வை மூதாட்டியிடம் சுட்டப் பழம் வேண்டுமா? அல்லது சுடாத பழம் வேண்டுமா என்று கேட்க, அவ்வையின் ஆணவம் அழிந்து எளியமுறையிலான வாழ்க்கையை மேற்கொண்டார் என்ற கதையும் உண்டு.

மேலும் வேல் கொண்டிருக்கும் முருகன், அறிவின் தன்மையை உணர்த்துகிறார். நம் அறிவானது அகன்றும் கூர்மையாகவும் இருக்க வேண்டும் என்பதே அதன் பொருள். மேலும் குறிஞ்சி மக்களின் கடவுளான வேலனின் கையில் வேலைக் கொடுத்தவர் அம்பிகை. சூரபத்மனை அழிக்க மலைவாசிகள் பயன்படுத்தும் ஆயுதத்தையே அவர் முருகனுக்கு அளித்தார்.

முருகன், அழகன், குமரன் என்ற பல்வேறு பெயர்களைக் கொண்டிருக்க காரணம் ஒவ்வொரு பெயரும் வாழ்க்கையில் நமக்குத் தேவையான ஒவ்வொரு படிப்பினையைச் சொல்கிறது.

Picture credit: www.pinterest.com