மதுரை அரசியான மீனாட்சி, பாண்டிய வம்சத்தின் பழம்பெரும் ஆட்சியாளர்களில் ஒருவரான மன்னர் மலையத்துவசப் பாண்டியனின் வீர புதல்வியாவார். மன்னர் தனது மனைவி இராணி காஞ்சனமாலாவுடன், குழந்தை வரத்திற்காக இணைந்து நடத்திய யாகத்தில் உதித்த உமையவள் இவள்!

மீனாட்சி அம்மனின் அதிசயப் பிறப்பைப் பற்றி அறிவோம்:

பாண்டிய மன்னன், தனது மனைவியுடன் நடத்திய யாகத்தில் மனமிறங்கிய பார்வதி, 3 வயது பெண் குழந்தையாக நெருப்பில் தோன்றுகிறார். தீயில் தோன்றியக் குழந்தை மூன்று மார்பகங்கள் கொண்டிருப்பதைக் கண்டு அனைவரும் அதிர்ச்சியுற, அப்போது வானில் தோன்றிய அசரீரி, குழந்தையின் மூன்றாவது மார்பகம், தன் வருங்காலக் கணவரைச் சந்திக்கும் வேளையில் மறைந்துவிடும் என்கிறது. அக்கணம் முதல், மன்னனின் வீர புதல்வியாக வளர்கிறார், மீன் வடிவ கண் கொண்ட மீனாட்சி!

சிறுவயதிலிருந்தே தற்காப்புக் கலைகளைப் பயின்ற மீனாட்சி, வில்வித்தையிலும் வாள் சண்டையிலும் வல்லவராகத் திகழ்ந்தார். மீனாட்சியின் 21-ஆவது வயதில், அரியணையில் அமர்ந்து மதுரையை ஆட்சி புரிய, தனது மகளுக்குச் சிறந்த துணையைத் தேடும் நோக்கத்தில், பாண்டிய மன்னன் , அண்டை நாட்டு மன்னர்களையும் இளவரசர்களையும் மதுரைக்கு வரவழைத்து மீனாட்சிக்குச் சுயம்வரம் நடத்தினார்.

எனினும், ஒப்பற்ற மீனாட்சியின் திறமைக்கு நிகராகப் பரிசுகளும் பட்டங்களும் வீழ்ந்தன. போரில் தன்னை வீழ்த்தும் நபரை மட்டுமே திருமணம் செய்து கொள்ள விரும்பினார் மீனாட்சி. ஆதலால், மீனாட்சியின் நிகரற்ற திறமையை அங்கீகரித்த அரசர், அவரது மரணத்தைத் தொடர்ந்து, மீனாட்சியை ஒரே ஆட்சியாளராக அரியணை ஏற அனுமதித்தார்.


மீனாட்சி அம்மனின் சாதனை மற்றும் சிவபெருமானுடன் இவரின் சந்திப்பு :

அரியணையில் அமர்ந்த மீனாட்சி, சிவபெருமான் வீற்றிருக்கும் கைலாயம் மலையை அடையும் வரை, ஒவ்வொரு எதிரியையும் வென்றார். தன்னவனைச் சந்தித்தவுடன், மீனாட்சியின் மூன்றாவது மார்பகம் மறைந்துவிட, சிவபெருமான் தான் மீனாட்சிக்கு விதிக்கப்பட்டத் துணை என்பதை அனைவரும் அறிந்தனர். இனிதே இவர்கள் இருவரும் மணம்முடிந்த பிறகு, மதுரையை மீனாட்சியும் சுந்தரேஸ்வரரும், தங்களின் ஆட்சியில் பக்தி மையமாக உருவாக்கினர்.

மதுரையை நல்லாட்சிப் புரிந்த மீனாட்சியின் அழியாச் செல்வமாக, 2500 ஆண்டுகளுக்கு முன் குமரி கண்டத்தில் உயிர் பிழைத்தவர்களால் நிறுவப்பட்ட மீனாட்சி திருக்கோயில், இன்றும் புகப்பெற்று விளங்குகிறது.

இவ்வாறு, மதுரை கோவிலில் வீற்றிருக்கும், மீன் வடிவ கண் கொண்ட மீனாட்சியின், ஒப்பற்றத் திறமையும் துணிச்சலும் என்றும் காலத்தால் போற்றப்படும் !

Image Credit : www.vikatakavi.in