"வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டிவைப்போமென்ற, விந்தை மனிதர் தலைகவிழ்ந்தார்" என்று பெண்ணுரிமைக்காகக் குரல் கொடுத்த, மகாகவி பாரதியை மறக்க முடியுமா?

தீப்பொறி போன்ற தன் எழுத்துக்களால், சமுதாயச் சிந்தனையை மக்களின் மனதில் வேரூன்றச் செய்தவர் பாரதி(தீ). அதிலும், குறிப்பாகப் பெண்ணியம் பற்றிய இவரது சிந்தனைக் காலத்தால் அழியாததாகும்.

பெண்குழந்தைப் பிறந்தால் கள்ளிப்பால் ஊற்றிச் கொலைச் செய்யும் அக்காலத்தில், தனது கவிதை வரிகளில் பெண்விடுதலை, பெண்ணுரிமை, பெண்ணடிமை என்ற பெண்ணியச் சிந்தனைகளை விதைத்தார்.

அதிலும், புதுமைப்பெண் என்று பாரதி யாரைச் சொல்கிறார்? அடிமை வாழ்விலிருந்து விலகி நின்று, துணிச்சலுடன் இச்சமுதாயத்தை எதிர்த்து நிற்பவளையே!

இவர் சிந்தனையில், ஆணும் பெண்ணும் சமம். அவ்வாறு இருக்கையில், பெண்ணுக்கு மட்டும் ஏன் அடிமைத்தனம்? என்ற இவரது ஆதங்கமே, இன்று பல பெண்களின், வெற்றியின் அடித்தளம்.

இதனை, "வற்புறுத்திப் பெண்ணைக் கட்டிக்கொடுக்கும் வழக்கத்தைத் தள்ளி மிதித்திடுவோம்" என்று தன் வரிகளில் அழுத்திச் சொல்லியுள்ளார். பெண்களும், கல்வி கற்று சிறந்ததொரு பணியில் அமர வேண்டும் என்பது இவரின் வேட்கை.

" நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்,
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,
திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்".

பாரதி கூறியப் புதுமைப்பெண்ணாய் முன்னேறலாமே!

Image Credit : Sastha Helping Hands