தீபகற்ப மலேசியாவில் 94% தனிநபர்களை மலேசிய வானொலி சென்றடைந்ததால் ஒரு புதிய உயர்வை மலேசிய வானொலி அடைந்துள்ளதை 2021 ஜி.எஃப்.கே வானொலி நேயர்களின் அளவீட்டு ஆய்வின் (GfK Radio Audience Measurement Survey, RAM) முதலாம் அலை கணக்கெடுப்பு வெளிப்படுத்தியுள்ளது. இது முறையே 20.6 மில்லியன் வாராந்திர வானொலி நேயர்களுக்குச் சமம். வாராந்திர வானொலி நேயர்களின் எண்ணிக்கை 282,000 அதிகரித்துள்ளது. வானொலி நேயர்களின் எண்ணிக்கையில், ஆஸ்ட்ரோ வானொலி 74.4% சந்தைப் பங்கைக் கைப்பற்றி அல்லது முறையே 15.3 மில்லியன் வாராந்திர வானொலி நேயர்களைக் கொண்டு முன்னோடியில்லாதக் காலக்கட்டத்திலும் வளர்ச்சிக் கண்டுள்ளது.

18.7 மில்லியன் மாதாந்திர சராசரி மின்னியல் வானொலி பதிவிறக்கங்கள் (ஸ்ட்ரீம்கள்), 23 மில்லியன் சமூக ஊடகங்களைப் பின்தொடர்பவர்கள், 127.7 மில்லியன் மாதாந்திர சராசரி காணொளி ரசிகர்கள், 7.4 மில்லியன் மாதாந்திர சராசரி அகப்பக்கப் பார்வையாளர்கள், 64.9 மில்லியன் மாதாந்திர சராசரி முகநூலின் அடைவுநிலை (reach) ஆகியவற்றின் வழி வானொலி நேயர்கள் எண்ணிக்கையின் அடைவுநிலையில் ஆஸ்ட்ரோ வானொலி உயர்ந்துள்ளது. RAAGA, முதல் தர தமிழ் வானொலி; ERA, முதல் தர மலாய் வானொலி; HITZ, முதல் தர ஆங்கில வானொலி மற்றும் MY, முதல் தர சீன வானொலி என பதிவிட்டு ஆஸ்ட்ரோ வானொலியின் அனைத்து தரங்களும் அனைத்து மொழிகளிலும் முதலிடத்தைக் கைப்பற்றியுள்ளனர்.
இந்த ஆய்வு வானொலி கேட்கும் பழக்கத்தை அறிய 6 வாரங்களுக்கும் மேலாகப் பாரம்பரிய வானொலி டைரிகள் (75%) மற்றும் மின்-டைரிகள் (25%) ஆகியவற்றின் கலவையுடன் தீபகற்ப மலேசியா முழுவதும் 6,000 தனித்துவமான நபர்களிடம் மேற்கொள்ளப்பட்டது. 18 வானொலி தரங்கள் இவ்வலையின் சந்தாதாரர்கள் ஆவர். ஆஸ்ட்ரோ வானொலி தரங்கள் முதல் 10 சிறந்தப் பிராண்டுகளின் தரவரிசையில் 6 இடங்களைக் கைப்பற்றின.