சர்க்கரை நோய் என்பது பரம்பரையைத் தொடர்ந்து வரும் நோய் என்பதல்லாம் இல்லை. நமது உணவுமுறையே அதற்கான முதன்மை காரணமாக விளங்குகிறது. சர்க்கரை நோய் வராமல் தடுக்கவும் அதை கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவும் உணவுகள் இதோ:-
1. வாழைப்பூ: வாழைப்பூவை கசாயம் செய்து சாப்பிடுவது நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும். அதேபோல், வாழைப்பூவுடன் சிறிது காய்ந்த மிளகாய் சேர்த்து அரைத்து துவையல் செய்து சாப்பிட்டாலும் சிறப்பு.
2. தென்னைமரப் பூ: தென்னை மரத்துப் பூவை நன்றாகக் காயவைத்து, அதைப் பொடி செய்து காலையிலும், இரவிலும் சாப்பிடுவது சர்க்கரை நோயைக் கட்டுப்பதுத்த உதவும். மேலும் சர்க்கரை நோயால் தளர்ந்து போன நரம்புகளைச் சரி செய்யும். இதனால் நம் கண் பார்வையும் தெளிவாக இருக்கும்.
3. கருஞ்சீரகம்: சமையலில் சீரகத்திற்குப் பதிலாக அல்லது சீரகத்துடன் கருஞ்சீரகத்தையும் சேர்க்கும் பொழுது அது சர்க்கரை நோய்க்கு ஒரு நல்ல நிவாரணமாகத் திகழ்கின்றது.
4. கறிவேப்பிலை: கறிவேப்பிலை, லவங்கப் பட்டை, வெந்தயம் இந்த மூன்றையும் சம அளவில் கலந்து வைத்துக் கொண்டு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருக்கும்.
Sourced from: Manithan
Image credit: Flickr