விளையாட்டு உடல் ஆரோக்கியத்திற்கு அத்தியாவசியமான ஒன்றாகும். அந்த வகையில், நீச்சல் பயிற்சி உடலுக்கு அதிகம் நன்மை பயக்கும் விளையாட்டாக அனுசரிக்கப்படுகின்றது.
நீச்சலின் பயன்கள் :
1. தினமும் 1 மணி நேரம் நீச்சல் பயிற்சி செய்தால் உடலில் உள்ள தேவையற்ற சதைகள் குறையும்.
2. கை, கால் மற்றும் தொடைப்பகுதியில் உள்ள தசைகள் வலுப்பெறும்.
3. நன்கு பசி எடுக்கும். கை, கால் குடைச்சல் மற்றும் மூட்டு வலிகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
4. இரத்த ஓட்டம் சீராகிறது.
5. நன்கு மூச்சு விடுவதற்கு நுரையீரல் பகுதி விரிந்து காணப்படும்.
6. நல்ல மன ஒருமைப்பாட்டையும், தன்னம்பிக்கையையும் தருகிறது.
7. சிறந்த முதலுதவிக்கலையாகவும், தற்காப்புக்கலையாகவும் விளங்குகிறது.
8. இளமையாக இருக்கவும் மற்றும் அழகைப் பராமரிக்கவும் நீச்சல் உதவுகிறது.
9. ஒரே நேரத்தில் தசை, இருதயம், என அனைத்துப் பகுதிகளும் இயங்குகிறது.
Soured from: PopTamil
Images credit: Fitandme