பெண்கள் ஒரு குறிப்பிட்ட வயதினை அடைந்துவிட்டால் அவர்களிடம் பல கேள்விக் கனைகள் தொடுக்கப்படும். அப்பபப்பா! பெண்களைச் சுற்றி உள்ளவர்களுக்கு இந்தக் கேள்விகளைக் கேட்பது மிக வழக்கமான ஒன்றுதான். ஆனால் அதற்கு பதில் சொல்வதுதான் மிக மிக கடினம். சிலர் இந்தக் கேள்விகளுக்கு பதில் தெரியாமல் முழிப்பதைக் கண்டால் சில சமயங்களில் வேடிக்கையாக இருக்கும்.
எந்த மாதிரியான கேள்விகள் பெண்களை எரிச்சலடையச் செய்யும் என்று தெரியுமா?
25 வயதில்...
எப்போ கல்யாணம்? உன் வயசுப் பிள்ளைகள் எல்லாம் கல்யாணம் பண்ணி பிள்ளைகள் இருக்கு...
திருமணத்திற்கு பிறகு...
எப்பொழுது பிள்ளை.... ஏதாவது திட்டம் இருக்கா?
காதலன் காதலியைப் பார்த்து...
உனக்கு சமைக்கத் தெரியுமா?
வேலை இடத்தில்...
உங்களுக்கு காதலர் யாராவது இருக்கிறார்களா?
சக தோழி...
கொஞ்சம் குண்டாகி விட்டீர்களோ?
தெருவில் நடந்து செல்லும் போது...
மேக்கப் கொஞ்சம் அதிகமா இருக்கோ?
எந்த ஒரு சூழலிலும் சொல்லக் கூடாதவை...
உனக்கு என்ன தெரியும்?
பெண்கள் முடிவு எப்போதுமே தப்பாதான் இருக்கும்
நான் சொல்வதை மட்டும் கேள்
ஏன் அந்தப் பையன் கூட பேசுறே?
உன் நல்லதுக்குதான் சொல்றேன்
பையன்களைப் பற்றி எனக்கு நல்லா தெரியும்...
Gif மூலம்:http://vomzi.com/