தூங்கி எழுந்த பின் முதுகுவலி அதிகமாகின்றதா? இதனால், நிம்மதியற்ற தூக்கத்தைப் பெறுகின்றீர்களா? இதைக் கடைப்பிடித்தால் இப்பிரச்சனைக்குத் தீர்வு காணலாம்...
1. குப்புறப் படுப்பவரா நீங்கள்? அப்போது தூங்கும் போது வயிற்றிற்கு அடியில் ஒரு தலையணையை வைக்கவும். இது முதுகிற்கு ஏற்படும் அழுத்தத்தைக் குறைக்கும்.
2. ஒருக்களித்து படுப்பவரா நீங்கள்? அப்போது கால்களை மடக்கி நெஞ்சிற்கு அருகில் குறுகிக் கொண்டு, இருகால்களுக்கு இடையே தலையணை வைக்கவும். இது முதுகிற்குப் பாதிப்பு உண்டாகாமல் தடுக்கும்.
3. நேராக படுப்பவரா நீங்கள்? அப்போது தலையணையை முட்டிக்கு அடியில் வைக்கவும். இது முதுகின் பாதிப்பைத் தடுக்கும்.
Sourced from: Lankasri
Image credit: Explorelifestyle and Pinterest