நம் நகங்களில் திடீரென பால் புள்ளிகள் தோன்றினால் அதற்கு சில காரணங்கள் இருக்கின்றன.

அதில் முதன்மையான காரணம் நாம் விரலை தவறுதலாக பலமாக இடித்துக்கொள்வது தான். இப்படி இடித்துக் கொள்ளும்போது போது நகத்தில் உண்டாகும் அதிர்ச்சியினால் இப்புள்ளிகள் தோன்றும்.

இருப்பினும் இப்புள்ளிகள் உடனடியாகத் தோன்றாது. அடிபட்ட நாளில் இருந்து ஒரு மாதத்திற்குள் இப்புள்ளிகள் வெளியே தோன்றும். நகம் வளர வளர இது மறைந்து விடும்.

ஃபங்கஸ் தொற்று அல்லது அபாயமான காய்ச்சல் தொற்று உண்டாகும் போதும் சில சமயங்களில் இப்புள்ளிகள் உண்டாகும். அப்படி வரும் போது மருத்துவரை நாடுவது சிறப்பு.

Sourced from: Poptamil
Image credit: Pinterest