உங்களின் முகம் பொலிவுடனும் அழகாகவும் இருக்க வேண்டுமா? அப்போது கண்டிப்பாக கற்றாழையைப் பயன்படுத்தவும்.
இது சரும நிறத்தை அதிகரிப்பதோடு, முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மற்றும் முதுமைப் புள்ளிகளை நீக்கி, முகத்தின் அழுக்குகளை வெளியேற்றி, முகத்தைப் புத்துணர்ச்சியுடனும் பிரகாசமாகவும் வெளிக்காட்டும்.
ஆதலால், கீழே குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகளில் ஏதேனும் ஒன்றை வாரத்தில் சில முறையாவது தவறாமல் செய்து பயன்பெறுங்கள்...
1. கற்றாழை ஜெல்லுடன் எலுமிச்சை சாற்றைக் கலந்து, முகத்தில் தடவி, 15 நிமிடத்திற்குப் பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
2. கற்றாழை ஜெல்லுடன் ரோஸ் வாட்டரைக் கலந்து, முகத்தில் தடவி, 15 முதல் 20 நிமிடத்திற்குப் பின் கழுவ வேண்டும்.
3. கற்றாழை இலையின் கூர்மையான முனைகளை நீக்கிவிட்டு, நீரில் வேக வைத்து பின் அரைத்து அதனுடன் தேன் கலந்து பசை செய்ய வேண்டும். இதை முகத்தில் தடவி 20 நிமிடத்திற்குப் பின் கழுவ வேண்டும்.
4. கற்றாழை ஜெல், வெள்ளரிக்காய் சாறு, தயிர் மற்றும் ரோஸ் ஆயிலைக் கலந்து, முகத்தில் தடவி, 15 நிமிடத்திற்குப் பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
5. கற்றாழை ஜெல்லுடன், காட்டேஜ் சீஸ், எலுமிச்சை சாறு, பேரிச்சம் பழம் மற்றும் வெள்ளரிக்காயைச் சேர்த்து அரைத்து, முகத்தில் தடவி, 30 நிமிடத்திற்குப் பின் கழுவ வேண்டும்.
6. கற்றாழை ஜெல்லுடன் மாம்பழ கூழ் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து, முகத்தில் தடவி, 20 நிமிடத்திற்குப் பின் கழுவ வேண்டும்.
Sourced from: Manithan
Image credit: Homeremediesforlife and Pinterest