வெறும் வயிற்றோடு இருக்கலாகாது எனும் அறிவுரையை நாம் அதிகம் கேட்டிருக்கக்கூடும். அதே போல வெறும் வயிற்றில் உண்ணத் தகாத உணவுகளும் உள்ளன...
1. காபி
இதனை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், அதில் உள்ள காப்ஃபைன் வயிற்றுப் படலத்தை பாதிக்கும். எனவே, ஒரு டம்ளர் தண்ணீர் குடித்த பின் காபி குடிக்கும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.
2. தக்காளி
அதில் உள்ள ஆசிட் தான் முக்கிய காரணம். இந்த ஆசிட்டானது இரைப்பையில் சுரக்கும் ஆசிட்டுடன் இணைந்து, கரைய முடியாத ஜெல்லை உருவாக்கி வயிற்றில் கற்களைக் கூட உருவாக்கும்.
3. மாத்திரைகள்
வெறும் வயிற்றில் மாத்திரைகள் உட்கொண்டால், அவை வயிற்றில் உள்ள படலத்தை அரிப்பதோடு, வயிற்று அமிலத்துடன் கலந்து, உடலில் ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கிவிடும்.
4. காரமான உணவுகள்
இதற்குக் காரணம் வயிற்றில் உள்ள அமிலத்துடன் காரம் சேர்ந்து, வயிற்றில் கடுமையான எரிச்சலை ஏற்படுத்துவதோடு, பிடிப்புக்களையும் ஏற்படுத்தும்.
5. சர்க்கரைவள்ளிக் கிழங்கு
சர்க்கரைவள்ளிக் கிழங்கில் உள்ள டானின் மற்றும் பெக்டின், குடல் வாலைத் தூண்டி, அதிகப்படியான செரிமான அமிலத்தை சுரக்கச் செய்து, நெஞ்செரிச்சலை ஏற்படுத்திவிடும்.
Sourced from: Manithan
Images credit: Laaloosh, Authoritynutrition and Shutterstock, Newssense - Vikatan