பங்குனி உத்திரம் என்றால் என்ன?
பங்குனி மாதத்தில் உத்திர நச்சத்திரமும் பௌர்ணமியும் இனைந்து வரும் நாளை பங்குனி உத்திர பண்டிகையாக கொண்டாடுவார்கள். இந்நாளில் சிவன்-பார்வதி, முருகன்-தெய்வானை மற்றும் ராமர்-சீதை போன்ற தெய்வ திருமணங்கள் நிகழ்ந்ததால் அணைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜைகளும் திரு கல்யாணங்களும் நடைபெறும்.

முருகப் பெருமானுக்கு விசேஷ நாள்
குறிப்பாக, முருகன் பக்தர்கள் இந்நாளை வெகுச் சிறப்பாக கொண்டாடுவார்கள். பல தெய்வ திருமணங்கள் நிகழ்ந்த பங்குனி உத்திரத்தன்று, முருகப் பெருமானை மனதார எண்ணி வழிபடுவோர்களுக்கு நல்ல, நிறைவான மணவாழ்க்கை அமையும் என்பது ஐதீகம்.

அதுமட்டுமல்லாமல், சுபிட்ஷமாக வாழ்க்கை, நல்ல உறவுகள் மற்றும் குழந்தை பாக்கியம் போன்று நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேற, முருகன் பக்தர்கள் விரதமிருந்து கந்தனின் தளங்களுக்கு திரவளாக பாத யாத்திரை மேற்கொள்வார்கள்.

பங்குனி உத்திர விரதம்
பங்குனி உத்திர விரதத்தை மேற்கொள்பவர்கள் மனதளவில் நல்ல எண்ணங்களையும் இறைச் சிந்தனையையும் கொண்டிருத்தல் மிகவும் அவசியம். விரதத்திற்கு முன்றைய தினம் குறைவாகவே உணவருந்த வேண்டும். பங்குனி உத்திர தினத்தன்று காலை எழுந்து நீராடி, வீட்டிலோ அல்லது ஆலயத்திலோ வழிபட்டு விரதத்தை உடனே தொடங்கிவிட வேண்டும். நாள் முழுதும் விரதமிருந்து மாலையில் முருகன், சிவன் அல்லது பெருமாள் கோயிலுக்குச் சென்று அங்குக் கொண்டாடப்படும் திருக்கல்யாணத்தைத் தர்சித்து விரதத்தை முடித்துக் கொள்ளலாம்.

முழுமையாக விரதமிருக்க இயலாதவர்கள், பாலும் பழங்களும் உண்டு விரதத்தை மேற்கொள்ளலாம். இவ்வாறு பங்குனி உத்திர விரதமிருப்பவர்களுக்கு நினைத்த காரியங்களும் கோரிக்கைகளும் நிறைவேறும். தொடந்து 48 வருடங்கள் முறையாக விரதம் கொள்ளும் பக்தர்கள் பிறவி பிணியிலிருந்து விடுபடுவார்கள் என்பது நம்பிக்கை.

Source: Dinamalar
Photo Credit: Just Hari Naam