Skip to main content

Lifestyle

கோயிலில் மணி அடிப்பது ஏன்?

Tap here to be part of our WhatsApp community

picture-credit-facebook-siva-kumar-(97)_3.png

கோயில்களில் மணி அடித்து இறைவனை வணங்குவது இந்துக்களின் வழக்கம். இந்த பழக்கம் வீடுகளில் பூஜை செய்யும் போதும் இந்துக்களின் வழக்கத்தில் உண்டு. ஏன் இந்த மணி ஒலிக்கப்படுகிறது என்று தெரியுமா?

மணியிலிருந்து எழும் ஒலி ஓம்கார ஒலியைக் கொண்டது. இந்த பிரபஞ்சம் ஓம் என்ற ஓம்கார ஒலியிலிருந்து உருவானது என்ற கருத்து உண்டு. இந்த ஓம்கார ஒலிதான் உயிர்களின் மூலம்.

கோயில் மணியை ஒலிக்கும் போது அதில் இருந்து வெளியாகும் இந்த ஓம்கார அதிர்வுகள் தீய அலைகளை அழிக்கும் சக்தி கொண்டவையாக உள்ளன.

மேலும் இந்த ஒலி நம் மனதை ஒரு நிலைப்படுத்தி ஓர் எண்ணத்தில் குவியவைக்கின்றது. இறைவனை தொழும் நேரத்தில் மனதை ஒருநிலைப்படுத்தி அவன் நினைவாக என்ணம் இருக்க இந்த மணியோசை உதவுகின்றது.

மேலும் பண்டைய காலங்கலில் உடல் நலம் சுகமில்லாதவர்களும் வேலைக்கு செல்பவர்களும் குறித்த நேரத்தில் கோயிலுக்கு செல்ல முடியாது. கோயில்களில் இருக்கும் இந்த பெரிய மணிகளின் ஒலிச்சத்தத்தை கேட்குபோது ஒரு கணம் அவர்கள் இருக்கும் இடத்திலியே கடவுளை நினைத்து வணக்குவர்.

இதனால்தான் கோயில்களின் மணி அடிக்கின்றனர். இது தூங்கிக் கொண்டிருக்கும் கடவுளை எழுப்ப அல்ல. தூக்கத்துல் இருக்கும் நம் தூய எண்ணங்களை தட்டி எழுப்பவே!

 

புகைப்பட மூலம்: athavannews.com,blog.onlineprasad.com

Related Topics