Skip to main content

News

தீபாவளி கொண்டாடுவதற்கான எட்டு காரணக் கதைகள்

untitled-design-(13).png
காரண காரியமின்றி எதுவும் நடப்பதில்லை .ஒவ்வொரு பண்டிகையைக் கொண்டாடுவதற்கும் பல காரணக் கதைகள் உண்டு. அவ்வகையில் தீபாவளி கொண்டாடுவதற்கான எட்டு காரணக் கதைகளைப் பார்ப்போமா?
 

1.   நரகாசுரனின் வதம்

      
படத்தின் மூலம்: tamil.oneindia

 
நரகாசுரன் என்ற அசுரன் மக்களையும் தேவர்களையும் வதைப்பதைக் கண்ட கிருஷ்ணர் அசுரனை வதம் செய்கிறார். அப்போது தன் தவற்றை உணர்ந்த நரகாசுரன் தான் இறந்த நாளை மக்கள் கொண்டாட வேண்டும் என்று கிருஷ்ணரிடம் கேட்டுக்கொண்டதற்கிணங்க அத்தினம் தீபாவளியாகக் கொண்டாடப்படுகிறது.



2. இராமரின் வருகை
    

படத்தின் மூலம்: harekrishna.pe

இதிகாச புராணமான இராமாயணத்தில் ராவணனால் கவரப்பட்ட சீதையை ராமர் மீட்டதுடன் 14 வருட வனவாசத்திற்குப் பிறகு அயோத்திக்கு வருகைப் புரிந்ததைப்    பறைசாற்றும் விதமாகத் தீபாவளி கொண்டாடப்படுகிறது.


3. பாண்டவர்களின் வருகை
    
    படத்தின் மூலம்: temple.dinamalar

மகாபாரத இதிகாசத்தில் பஞ்ச பாண்டவர்கள் கௌரவர்களின் சூழ்ச்சியால் 12 ஆண்டுகள் வனவாசத்தையும் ஓர் ஆண்டு அஞ்ஞாத வாசத்தையும் (தலைமறைவான வாழ்க்கை)  முடிவுற்ற பிறகு  கௌரவர்களுடன் போரிட்டு வெற்றி பெற்று நாடு  திரும்பிய  தினத்தைத் தீபாவளியாகக் கொண்டாடப்படுவதாக எடுத்துரைக்கப்படுகிறது.


4.  லட்சுமி தேவி பிறந்த தினம்
     
     
 படத்தின் மூலம்: patrikai

பாற்கடலைக் கடையும்போது லட்சுமி தேவி அவதரித்தார். எனவே, லட்சுமி தேவியின் பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாகவும் செல்வ வளத்தை வழங்கும் தேவியை வீட்டிற்கு அழைக்கும் விதமாகவும், விஷ்ணு பகவான் லட்சுமி தேவியை மணந்ததைக் கொண்டாடும் விதமாகவும் தீபாவளி கொண்டாடப்படுகிறது.


5.   விக்கிரமாதித்தரின் முடிசூட்டு விழா
       
      படத்தின் மூலம்: dheivegam

மக்களின் மன்னனாக விளங்கிய விக்கிரமாதித்தர் மன்னராக முடிசூட்டிய தினத்தை நினைவு கூர்ந்து கொண்டாடப்படும் நிகழ்வாகவும் தீபாவளி கொண்டாடப்படுகிறது.


6. சமணர்களின் மகாகுருவை நினைவுக்கூறும் வண்ணம்
    
     
          படத்தின் மூலம்: Wikipedia


சமணர்களின் மகாகுருவான மகாவீரர், ஞானத்தை அடைந்த தினத்தை, அவரை நிறைவுக்கூறும் வகையில் தீபாவளி கொண்டாடப்படுவதாகக் கூறப்படுகிறது.


7. அர்த்தநாரீஸ்வரர் அவதாரமாக உருவெடுத்தல்
    
    படத்தின் மூலம்: vikatan.com

கேதார கெளரி விரதம் முடிவடைந்தவுடன், சக்தியின் விரதத்தின் சிறப்பால் சிவன் சக்தியைத் தனது சரிபாதியாக ஏற்றுக் கொண்டு அர்த்தநாரீஸ்வரராக உருவம் கொண்டதைப் போற்றும் வகையில் தீபாவளி கொண்டாடப்படுவதாக ஸ்கந்த புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


8. இயற்கையைப் போற்றும் வண்ணம்
    
    படத்தின் மூலம்: Malaimalar


விவசாயம் செழிக்க இயற்கையை வணங்கும் பொருட்டு விவசாயிகள் தங்களின் வீடுகளில் விளக்கேற்றி வழிப்பட்டனர். அவை நாளடைவில் தீபாவளி பண்டிகையாக உருவெடுத்தன.

தகவலுக்கான மூலம் : tamil.boldsky.com, yarl.com


ஆஸ்ட்ரோ தீபாவளி சிறப்பு உள்ளடகங்களுக்கு, https://programs.astroulagam.com.my/inaivominaippom





 

Advertisement