Skip to main content

Lifestyle

விநாயகர் சதுர்த்தி அன்று செய்ய வேண்டியவை....

20180124082240543facebook_main.jpg

இன்று விநாயகருக்கு மிகவும் விசேஷமான நாள்! இந்நாள் அன்று, பின்வருவதைக் கடைபிடிப்பது சிறப்பு...

 

Advertisement

1. அதிகாலையில் குளித்து, வாசலில் மாவிலைத் தோரணத்தைக் கட்டி, வீட்டை மற்றும் பூஜை அறையைச் சுத்தம் செய்ய வேண்டும்.

2. இந்த நாள் அன்று காலையில் இருந்து விரதம் மேற்கொள்வது சிறப்பு.

3. பூஜை அறையில் ஒரு சிறிய கோலம் போட்டு, அதன் மேல் தலை வாழை இலையை வைத்து, இலையில் பச்சரிசியை பரப்பி வைக்க வேண்டும்.

4. அந்த இலையில் களிமண்ணாலான விநாயகரை வைத்து, அவரைப் பலவகை புஷ்பங்கள் மற்றும் அறுகம்புல் மாலையினால் அலங்கரிக்க வேண்டும்.

5. அதன் பிறகு, அவருக்குப் பழங்களைப் படைத்து, அதனுடன் அவர் விரும்பும் மோதகம், எள்ளுருண்டை, கொழுக்கட்டை, நெய்வேத்தியம், பாயாசம் போன்ற பலகாரங்களைச் செய்து படைக்க வேண்டும்.

6. விநாயகரின் பாடல்களைப் பாடி வணங்கி, உங்களது விரதத்தை முடித்துக் கொள்ள வேண்டும்.

7. இறுதியாக, களிமண்ணால் செய்யப் பட்ட இந்த விநாயகரை ஏதாவது நீர்நிலையில் கொண்டுபோய் கரைப்பது வழக்கம்.

 

 

Sourced from: Dinamani
Images credit: Ishtadevata and Intoday

Related Topics